முகப்பு
இந்த நாளில்...

04.11.1929: இன்று இந்திய பெண் கணிதமேதை சகுந்தலா தேவியின் பிறந்த தினம்

சகுந்தலா தேவி ஒரு இந்திய பெண் கணிதமேதை ஆவார்.

இந்த நாளில்...

04.11.1929: இன்று இந்திய பெண் கணிதமேதை சகுந்தலா தேவியின் பிறந்த தினம்

சகுந்தலா தேவி ஒரு இந்திய பெண் கணிதமேதை ஆவார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:15 PM
பகிர்:

சகுந்தலா தேவி ஒரு இந்திய பெண் கணிதமேதை ஆவார் . சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் தனது அபார திறமையினால் கம்ப்யூட்டர் போன்ற இயந்திரங்களைத் தோற்கடிக்கும் வேகத்தில், கணிதம் தொடர்பான கேள்விகளுக்கு விடையளிக்கும் வல்லமை படைத்தவராக விளங்கினார் . தன்னுடைய வியத்தகு கணிதத் திறமையின் மூலம் “கின்னஸ் புத்தகத்தில்” இடம் பிடித்தார்.

சகுந்தலா தேவி 1929 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான்காம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு சர்கஸில் வேலைப்பார்த்து வந்தார். சகுந்தலா தேவி தன்னுடைய மூன்று வயதிலேயே, தன் தந்தையுடன் சீட்டுகட்டு விளையாட்டில் பல வித்தைகள் செய்து தன் கணிதத் திறமையை வெளிப்படுத்தினார். ஆறுவயதில், மைசூர் பல்கலைக்கழகத்திலும் மற்றும் எட்டு வயதில் ,அண்ணா பல்கலைக்கழகத்திலும் கணக்கு மற்றும் நினைவாற்றலில்  தன்னுடைய அசாத்திய திறமையை வெளிப்படுத்தி, அனைவரையும் வியக்க வைத்தார்.

அதன் பிறகு ஜூன் 18, 1980 அன்று லண்டனிலுள்ள 'இம்பீரியல் கல்லூரியில்” நடந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இரண்டு 13 இலக்க எண்களை  (7,868, 369,774,870 மற்றும் 2,465,099,745,779  = 18.947.668.177.995.426.462.773.730)  எண்களை பெருக்கி, அதற்கான விடையை வெறும் 28 வினாடிகளில் கூறி உலகை திரும்பிப்  பார்க்கக் வைத்தார்.  இது உலக சாதனையாக, ‘கின்னஸ் புத்தகத்தில்’ இடம் பெற்றுள்ளது.

இப்படி பல சாதனைகளை  புரிந்துள்ள சகுந்தலா தேவி சிறுநீரகக் கோளாறு மற்றும் சுவாசப் பிரச்சனைகளின் காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 21.04.2013 அன்று தனது 83 வது வயதில் மரணமடைந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →