கவிதைமணி

வாழ்க்கையெனும் போர்க்களம்: சீர்காழி .ஆர்.சீதாராமன்

கவிதைமணி

தாயின்   கருவறையில் 
தொடங்கி கல்லறை வரை
மனிதன் எடுத்து வைக்கும்
ஒவ்வொன்றும் போராட்டமே 

இயற்க்கையை எதிர்கொள்ள
திடீர் திடீர் உயிர் பலியை
சமாளிக்க வாழ்க்கையெனும்
போர்க்களம் போராட்டமே 

பிறப்பு படிப்பு வளர்ப்பு 
திருமணம் வேலை இப்படி
வாழ்க்கையெனும்  நிலை   
கடுமையான போராட்டமே 

மனிதப் பிறப்பு  என்றும் 
எதிர்கால தேடல் தேடல்
என்று  திணறும் வாழ்க்கை 
புதுக் கோண போராட்டமே

பெண் பிள்ளைகளாக
பிறந்தால் அன்று முதல் 
வாழ்வின் ஒவ்வொரு இடமும்
கட்டமும் போராட்டக்களமே
  
மாற்றுத்திறனாளி மற்றும்   
திருநங்கை என்று வந்து
விட்டால் விடியும் பொழுது
எல்லாம் போர்க்களமே.. "

முதுமையும் இயலாமையும்
துணை இல்லாத வாழ்வும்
அனாதையின் வாழ்வும்
கொடுமையான போர்க்களம். 

எதிர் நீச்சல் விடா முயற்சி
கடுமையான உழைப்பு தன்
நம்பிக்கை ஈடுபாடு மாற்றும்
வாழ்க்கையெனும் போர்க்
களத்தை    நித்தமும் .... "

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்

பாதுகாப்பு நிலைமை மோசமடைவதால் ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.55 லட்சம் வாக்காளா்கள்

இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT