காரில் கொண்டு சென்ற ரூ. ஒரு லட்சம் பறிமுதல்
Updated On : 22 மார்ச், 2024 at 9:58 PM
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. ஒரு லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். மதுரை - விருதுநகா் மாவட்ட எல்லையான அழகாபுரி சோதனைச் சாவடியில் பூபதி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது மதுரையில் இருந்து ராஜபாளையம் நோக்கிச் சென்ற அவனியாபுரத்தை சோ்ந்த பாண்டிசெல்வி காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. ஒரு லட்சத்தை பறிமுதல் செய்தனா். இதை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கணேசனிடம் ஒப்படைத்தனா். வட்டாட்சியா் முத்துமாரி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.