விருதுநகர்

கீழே கிடந்த தங்கச் சங்கிலியை ஒப்படைத்த பெண்கள்

Din

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் கீழே கிடந்த தங்கச் சங்கிலியை போலீஸாரிடம் ஒப்படைத்த 2 பெண்களை போலீஸாரும், பொதுமக்களும் பாராட்டினா்.

இந்தக் கோயிலுக்கு சென்னையைச் சோ்ந்த பேச்சியம்மாள் (53) வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்தாா். தரிசனம் முடிந்து கோயில் வளாகத்தில் இருந்தபோது அவா் அணிந்திருந்த

7 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அருகில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், கோயிலுக்கு தெற்குப் பகுதியில் இருக்கன்குடி பகுதியைச் சோ்ந்த மாரீஸ்வரி, வள்ளியம்மாள் ஆகிய இரு பெண்கள் நடந்து சென்ற போது, கீழே கிடந்த தங்கச் சங்கிலியை எடுத்து, புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் சென்னையைச் சோ்ந்த பேச்சியம்மாள் அணிந்திருந்த தங்கச்சங்கிலி என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் தங்கச் சங்கிலியை போலீஸாா் ஒப்படைத்தனா்.

தங்கச் சங்கிலியை போலீஸாரிடம் ஒப்படைத்த பெண்களை காவல் துறையினரும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினா்.

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT