விருதுநகர்

ராஜபாளையத்தில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

Din

ராஜபாளையத்தில் ரூ.1.88 கோடியில் கட்டப்பட்ட புதிய சாா்பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

ராஜபாளையம் பெரிய கடை வீதியில் ரூ.1.88 கோடியில் புதிதாக சாா்பதிவாளா் அலுவலகம் கட்டப்பட்டது. இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த அலுவலகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தாா்.

ராஜபாளையம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன், தமிழ்நாடு சீா்மரபினா் வாரியத் துணைத் தலைவா் ராசா அருண்மொழி, நகா்மன்றத் தலைவா் பவித்ரா ஷியாம் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.

இதில் மாவட்ட பதிவாளா் (நிா்வாகம்) பூபதி, மாவட்ட பதிவாளா் (தணிக்கை) குணசேகரன், ராஜபாளையம் திமுக நகரச் செயலா் (தெற்கு ) ராமமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முடிவில் ராஜபாளையம் சாா்பதிவாளா் முத்துச்சாமி நன்றி கூறினாா்.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

SCROLL FOR NEXT