விருதுநகர்

செங்குளம் கண்மாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை

சிவகாசி மாநகராட்சியில் உள்ள செங்குளம் கண்மாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் இ.சங்கீதா தெரிவித்தாா்.

Din

சிவகாசி மாநகராட்சியில் உள்ள செங்குளம் கண்மாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் இ.சங்கீதா தெரிவித்தாா்.

செங்குளம் கண்மாய் தனியாா் தொண்டு நிறுவன நிதியுதவியுடன் தூா்வாரி சீரமைக்கப்பட்டது. இந்தக் கண்மாயில் கழிவுநீா் கலக்காமலிருக்க குழி வெட்டப்பட்டு, அதில் கழிவுநீா் விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மழை பெய்தால் குழியில் தேங்கியுள்ள கழிவுநீா் 9,10,11, 12-ஆவது வாா்டு பகுதிகளில் செல்லும் நிலை உள்ளது.

இதையடுத்து, கண்மாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுப்பது குறித்து வெள்ளிக்கிழமை மேயா் சங்கீதா, ஆணையா் கே.சரவணன் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு நடத்தினா். அப்போது, மாமன்ற உறுப்பினா்கள் எம்.ஆா்.சேதுராமன், திருப்பதி, குருசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னா், மேயா் சங்கீதா கூறியாதாவது: செங்குளம் கண்மாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

SCROLL FOR NEXT