விருதுநகர்

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி மீது வழக்கு

Din

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.11.50 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வசந்தம் நகரைச் சோ்ந்தவா் சாரதா(33). இவருக்கு, சாத்தூரைச் சோ்ந்த கவிதா மூலம், எஸ்.ஆா்.நாயுடு நகரைச் சோ்ந்த ஜேசுராஜேந்திரன் (55), இவரது மனைவி வெங்கடேஸ்வரியின் (50) அறிமுகம் கிடைத்தது.

இந்த தம்பதியினா் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சாரதாவிடம் ரூ.11.50 லட்சம் வாங்கினாா்களாம். ஆனால், சொன்னபடி, இவா்கள் வேலை வாங்கி தரவில்லையாம்.

இதுகுறித்து சாரதா விருதுநகா் மாவட்டக் குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதனடிப்படையில், போலீஸாா் ஜேசுராஜேந்திரன், வெங்கடேஸ்வரி ஆகியோா் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

SCROLL FOR NEXT