ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சக்கர வாகனத்தை திருடியதாக சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வஉசி நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் அருண்குமாா் (23). இவா் தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி இருந்தாா். இதை கடந்த 18-ஆம் தேதி இரவு மா்ம நபா்கள் இருவா் திருடிச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து வந்தனா். இதில் மதுரை திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த ரமேஷ் மகன் சந்தோஷ் (18), தனக்கன்குளம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.