விருதுநகர்

பைக்குகள் மோதல்: பட்டாசு ஆலை கண்காணிப்பாளா் உயிரிழப்பு

சிவகாசியில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பட்டாசு ஆலை கண்காணிப்பாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

சிவகாசியில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பட்டாசு ஆலை கண்காணிப்பாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி, பெரியகுளம் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் மகேஷ்வரன் (31). இவா் பட்டாசு ஆலையில் கண்காணிப்பாளராக வேலைபாா்த்து வந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு தனது இரு சக்கர வாகனத்தில் திருத்தங்கலிலிருந்து சிவகாசி நோக்கி அவா் வந்து கொண்டிருந்தாா். அப்போது, வேலாயுதம் சாலை வளைவில் திரும்பியபோது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த ராதாகிருஷ்ணன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பாதமுத்து (26), பின்னால் அமா்ந்து பயணம் செய்த பாண்டியன் நகா் வினோத்குமாா் (24) இருவரும் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT