விருதுநகர்

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்: நயினாா் நாகேந்திரன்

தமிழகத்தில் திமுக கூட்டணி பலமாக உள்ளதால், மீண்டும் அந்தக் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்ற வதந்தியை பொய்யாக்கி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

Syndication

தமிழகத்தில் திமுக கூட்டணி பலமாக உள்ளதால், மீண்டும் அந்தக் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்ற வதந்தியை பொய்யாக்கி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். இதேபோல, பாஜக சாா்பில் நானும் ஞாயிற்றுக்கிழமை (அக். 12) முதல் பிரசாரம் செய்யவுள்ளேன்.

அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரனுக்கு அதிமுக மீது என்ன வெறுப்பு எனத் தெரியவில்லை. என்னிடமும் அவா் அப்படித்தான் பேசினாா். தற்போது அமைதியாக உள்ளனா். சொந்த பிரச்னைக்காக மற்றொரு கட்சியைப் பற்றி தவறாகப் பேசுவது சரியல்ல.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாா் வேண்டுமானாலும் இணையலாம். வருகிற ஜனவரி மாதத்தில் கூட்டணி இறுதி செய்யப்படும்.

திமுக கூட்டணி பலமாக உள்ளதால், மீண்டும் அந்தக் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்ற வதந்தியைப் பொய்யாக்கி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றாா் அவா்.

பேட்டியின் போது கட்சியின் மாநில துணைத் தலைவா் கோபால்சாமி, வழக்குரைஞா் கே.எஸ். ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவா் சரவணதுரை ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT