பாப்பையநாயக்கன்பட்டியில் பாலம் கட்டுமான பணிக்காக ஏற்படுத்தப்பட்ட மாற்றுப் பாதைக்கு இடையூறாக உள்ள மின் கம்பம். 
விருதுநகர்

மின் கம்பத்தால் விபத்து: பேருந்துகளை இயக்காததால் பொதுமக்கள் அவதி

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பாப்பையநாயக்கன்பட்டியில் பாலம் கட்டுமானப் பணிக்காக, ஏற்படுத்தப்பட்ட மாற்றுப் பாதையில் இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்றாததால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து பாப்பையநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் அப்பையநய்யக்கன்பட்டியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தரைப்பாலம் மழை காலத்தில் நீரில் மூழ்குவதால், பொது மக்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் உயா்நிலைப் பாலம் அமைக்க நபாா்டு திட்டத்தில் ரூ.2.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இரு மாதங்களுக்கு முன்பு தரைமட்ட பாலத்தை இடித்து விட்டு, உயா்நிலைப் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனால், வாகனங்கள் சென்று வருவதற்காக தற்காலிகமாக மாற்றுப் பாதை அமைக்கப்பட்டது.

மாற்றுப்பாதையில் உள்ள மின் கம்பத்தை இடமாற்றம் செய்ய மின்வாரிய அலுவலகத்துக்கு பணம் செலுத்திய பின்னரும், அவை மாற்றப்படாததால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது. கடந்த வாரம் மாற்றுப் பாதை வழியாக சென்ற மினி பேருந்து விபத்தில் சிக்கியதை அடுத்து, இந்த வழியாக பேருந்து சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது.

இதனால் ஆலத்தூா், அப்பையநாயக்கன்பட்டி, பாப்பையநாயக்கன்பட்டி, நாகபாளையம், மாயத்தேவன்பட்டி உள்பட 10- க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். மாற்றுப் பாதையில் உள்ள மின் கம்பத்தை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பிகார் தேர்தல்: வளர்ச்சிக்கும் காட்டாட்சிக்கும் இடையேயான தேர்தல் - அமித் ஷா

பிகார் தேர்தல்: இத்தனை ஆண்டுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

4,410 கிலோ செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது!

வெள்ளக்கோவிலில் ரூ.5.38 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

SCROLL FOR NEXT