ஏடிஎம்-ல் பணமெடுக்கலாம் Center-Center-Chennai
இணையம் ஸ்பெஷல்

டெபிட் கார்டு இல்லாவிட்டாலும் யுபிஐ மூலம் ஏடிஎம்-மில் பணமெடுக்க முடியுமா?

டெபிட் கார்டு இல்லாவிட்டாலும் யுபிஐ மூலம் ஏடிஎம்-ல் பணமெடுப்பது எப்படி என்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

வழக்கமாக, வங்கிக் கணக்கிலிருக்கும் பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்க, அனைவருமே டெபிட் அல்லது கிரெடிட் அட்டையைத்தான் பயன்படுத்துவோம். ஆனால், டெபிட் கார்டு இல்லாவிட்டாலும் கூட யுபிஐ மூலம் ஏடிஎம்-ல் இருந்து பணமெடுக்கலாம்.

பல முக்கிய வங்கிகள், ஏடிஎம் கார்டு இல்லாமலும் பணமெடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. இதன் மூலம், எப்போதும் கையில் டெபிட் கார்டு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செல்போனில் இருக்கும் ஜிபே, போன் பே போன்ற செயலிகள் மூலம் யுபிஐ க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து ஏடிஎம் மூலமாகவே பணமெடுக்கும் வசதி நடைமுறையில் உள்ளது. சில வங்கிகள், ஏடிஎம் மூலம் பணமெடுப்பதை மொபைல் பேங்கிங் அல்லது இணையதள பேங்கிங் மூலமாகக் கூட செயல்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.

என்னென்ன வசதி?

ஏடிஎம் கார்டு இல்லாமல் வெளியில் சென்றுவிட்டோம். ரொக்கமாக கையில் பணம் தேவை. திரும்ப வீட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஜிபே அல்லது போன் பே இருந்தாலே போதும். உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஏடிஎம் மூலம் பணமெடுக்கலாம். ஒரே ஒரு விஷயம்தான் முக்கியம் வங்கிக் கணக்கில் பணமிருக்க வேண்டும்.

பாதுகாப்பானதும் கூட..

எப்போதும் கையில் டெபிட் கார்டை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. டெபிட் கார்டு வைத்து பணமெடுப்பதைவிடவும், மொபைல் செயலி மூலம் பணமெடுப்பது மிகவும் சிறந்தது, பாதுகாப்பானதும்கூட.

அதிகபட்சம் எவ்வளவு எடுக்கலாம்?

டெபிட் கார்டு இல்லாமல் அதிகபட்சமாக ரூ.10,000 வரை எடுக்கலாம். இது வங்கிக்கு வங்கி மாறுபடலாம்.

ஏடிஎம்-ல் இருந்து பணமெடுப்பது எப்படி?

யுபிஐ செயலில் உள்ள ஏடிஎம் மையத்துக்குச் செல்லுங்கள். அதில் யுபிஐ ரொக்கப் பணம் பெறுதல் (யுபிஐ கேஷ் வித்ட்ராயல்) என்ற மெனுவை கிளிக் செய்யவும்.

உடனடியாக ஏடிஎம் ஸ்கிரீனில் க்யூஆர் கோடு காட்டும்.

உங்களிடம் உள்ள யுபிஐ செயலியை ஓபன் செய்து அதில் ஸ்கேன் வசதி மூலம் க்யூஆர் கோடு ரீட் செய்யவும்.

ஸ்கே செய்த பிறகு, உங்களுக்கு எவ்வளவுத் தொகை தேவையோ அதனைப் பதிவு செய்து ப்ரசீட் என்பதை கிளிக் செய்யவும்.

பிறகு, உங்களது யுபிஐ பின் எண்ணை உள்ளிட்டால், ஏடிஎம்-ல் இருந்து நீங்கள் பதிவு செய்த தொகை வெளியே வரும்.

அவ்வளவுதான், உங்களுக்குத் தேவையான தொகை கிடைத்துவிட்டது.

சில வங்கிகள் அல்லது ஏடிஎம்களில் இந்த வசதி இதுவரை ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இந்த வசதி உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவுடன் கூட்டு சேருபவர்கள் பலவீனமானவர்கள்: கே. எஸ். அழகிரி

புதிய கல்விக் கொள்கை குறித்து Thiagarajan Kumararaja | கல்வியில் சிறந்த தமிழ்நாடு

சமூக ஆர்வலர் வாங்க்சுக் அமைப்பின் வெளிநாட்டு நிதி உரிமம் ரத்து! லடாக் வன்முறை எதிரொலி!

வாழ்க்கைக்காக கொஞ்சம் படியுங்கள்: மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுறுத்தல்

இந்த வார ஓடிடி படங்கள்!

SCROLL FOR NEXT