தினமணி கதிர்

சிரி... சிரி...

"சிலையைத் திருடிட்டுப் போனவனுக்கு கொஞ்சம் கூட ரசனை இல்லைன்னு ஏன் சொல்றே?''

தினமணி

• "சிலையைத் திருடிட்டுப் போனவனுக்கு கொஞ்சம் கூட ரசனை இல்லைன்னு ஏன் சொல்றே?''
""சாமி சிலையோட சேர்த்து நம்ம தலைவரோட சிலையையும் திருடிக்கிட்டு போயிருக்கானே‘‘
பி.சி.ரகு, பள்ளிச்சேரி.

• "நான் ஒன்னு நினைச்சா தெய்வம் ஒன்னு 
நினைக்குது''
"அதனாலென்ன?''
"இனிமேல் ஒன்றைத் தவிர மற்ற எண்களை நினைக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்''
ஆர்.விஸ்வநாதன், சென்னை-78.

• "பேங்க்ல நாம போட்ட பணம் பத்திரமாக இருக்குமா?''
"அதெப்படி இருக்கும்? நாம பணத்தைத் திருப்பி எடுக்கும்போது வேற பணத்தைத்தான் தருவாங்க''
அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி

• "ஏங்க பான் கார்டுடன் ஆதார் கார்டை 
இணைச்சுக் கட்டுறீங்க?''
"பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்கலேன்னா அபராதம் போடுவாங்களாமே''
கு.அருணாசலம், தென்காசி

• "பக்கத்து வீட்டு டிவியைப் பார்த்துட்டு என் மனைவி கண்ணீர் விடுறா''
"அவ்வளவு சோகமான சீரியலா அந்த 
டிவியிலே ஓடுது?''
"இல்லே... ஒன்றரை லட்ச ரூபாய்க்கு புது 
டிவி வாங்கி இருக்காங்க''
கு.அருணாசலம், தென்காசி.

"டிவி பார்த்துப் பார்த்து கண்ணெல்லாம் எரியுது டாக்டர்''
"இந்த மருந்தை ரெண்டு சொட்டு கண்ணிலே விடுங்க''
"டாக்டர் இதை டிவி பார்க்குறதுக்கு முன்னாடி 
விடணுமா... இல்லை பார்த்த பின்னாடி விடணுமா?''
சி.ரகுபதி, போளூர்.

• "நேற்று ஒருத்தன் என்கிட்ட கத்தியைக் காட்டி ஆயிரம் ரூபாய் கேட்டான்''
"ரொம்ப அநியாயமா இருக்கே... ஒரு கத்தியோட அதிக விலையே 200 ரூபாய்தானே?''
எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சி.

• "ஏங்க எதுக்கு பசங்க எல்லாரையும் வாசல்ல உட்கார வச்சு பரீட்சை எழுத வச்சிருக்காங்க?''
"என்ட்ரன்ஸ் எக்ஸாமாம் சார்''
ஜோ.ஜெயக்குமார், 
நாட்டரசன்கோட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT