தினமணி கதிர்

 மைக்ரோ கதை

வெளிநாட்டில் சென்று பணியாற்றினால் கைநிறைய பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பிரகாஷ் தனது பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்தான்.

DIN

வெளிநாட்டில் சென்று பணியாற்றினால் கைநிறைய பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பிரகாஷ் தனது பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்தான். தனது மனைவி, பத்து வயது மகன், வளர்ப்பு நாயுடன் விமான நிலையம் நோக்கி, வாடகை காரில் பயணித்தான்.

விமான நிலையத்துக்கு சில கி.மீ. முன்னர் நாயை இறக்கினான்.  

காரை பின்தொடர்ந்து நாய் வரும் என எதிர்பார்த்த   பிரகாஷ், எதிர்திசையை நோக்கி ஓடியதால் சந்தோஷமுற்றார்.  விமான நிலையத்தை அடைந்தவுடன் சோதனை முடித்துவிட்டு, ஓய்வறையில் காத்திருந்தான்.  

அப்போது முதியோர் இல்ல நிர்வாகி செல்போனில் அழைக்க, பிரகாஷ் எடுத்துப் பேசியபோது, ''சார் உங்க நாய் பெற்றோரை தேடி வந்திருக்கு. நானே அதை பராமரிக்கிறேன். மனிதர்களைவிட நாய்க்கு நன்றி உணர்வு அதிகம்'' என்றார்.
குற்ற உணர்வில், பிரகாஷ் மனம் குறுகினான்.

-இரா.சாந்தகுமார், கூடுவாஞ்சேரி.

எம்எம்எஸ்

கர்வம் இருந்தால் கௌரவம் போகும்.

-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT