தினமணி கதிர்

மின்நூல்களாகும் அச்சு நூல்கள்...

மாற்றுத் திறனாளி ஆசிரியர் பொன்.சக்திவேலின் மின்நூலாக்கப் பயணம்

சா.ஜெயப்பிரகாஷ்

பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளும் ஒலியாகக் கேட்டுப் பயன்பெறும் வகையில், ஏழுநூறுக்கும் மேற்பட்ட நூல்களை மின்நூல்களாக மாற்றி வழங்கி வருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் பொன்.

சக்திவேல்.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட ஆலங்குடி அருகேயுள்ள கத்தக்குறிச்சி சண்முகநாதபுரத்தைச் சேர்ந்தவர் பொன்.சக்திவேல். பிறவிலேயே பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளியான இவர், தற்போது அறந்தாங்கி அருகே சிலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர்.

12 தொகுப்புகளைக் கொண்ட 'ஆனந்தரங்கனின் நாட்குறிப்பு', ஆறு தொகுப்புகளைக் கொண்ட கலைஞர் மு.கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி', அண்மையில் சாகித்திய அகாதெமி வெளியிட்ட சிற்பியின் 'இலக்கிய வரலாறு' உள்ளிட்ட சுமார் 700 நூல்களை மின்நூலாக்கியிருக்கிறார்.

அச்சுநூலை 'ஸ்கேன்' செய்து, அதனை 'ஓ.சி.ஆர்.' எனப்படும் எழுத்துணரி மூலம் 'வேர்டு பைல்'-ஆக மாற்றி, கைப்பேசியிலோ அல்லது கணினியிலோ ஒலி வடிவில் கேட்க முடியும் என்பதுதான் இவரது மின்

நூலாக்கும் பணியின் முக்கிய வசதி. இதன் தொடர்ச்சியாக 'பிரெய்லி' வடிவ நூலாகவும் அச்சிட்டுக் கொண்டு வாசிக்கவும் முடியும்.

இதுகுறித்து பொன். சக்திவேலிடம் பேசியபோது:

பிறவியிலேயே பார்வைக்குறையுள்ள மாற்றுத் திறனாளியான நான், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 'பி.ஏ.', புதுகை மன்னர் கல்லூரியில் 'எம்.ஏ.', புதுகை அரசு கல்வியியல் கல்லூரியில் 'பி.எட்.', அதனைத் தொடர்ந்து ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்.) பட்டமும் முடித்துள்ளேன்.

'பார்வையற்றோருக்கான தொழில்நுட்பம்' என்பதுதான் 'எம்.ஃபில்' ஆய்வு. அதன்பிறகு தற்போது திண்டுக்கல் காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகதத்தில் 'பார்வையற்றோருக்கான இதழ்கள்' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் படித்து வருகிறேன்.

எனது கல்விக்காக நான் படிக்க பட்ட கஷ்டங்களை என்னைப் போன்ற யாரும் சந்திக்கக் கூடாது என்ற நோக்கத்தில்தான் மின் நூலாக்கும் பணிகளைத் தொடங்கினேன்.

2019-இல் மத்திய அரசின் ஆய்வு நிதியைப் பெற்றேன். அதிலிருந்து ரூ. 65 ஆயிரம் மதிப்பில் 'ஸ்கேனர்' வாங்கினேன். ஒரே நேரத்தில் இரு பக்கமும் ஸ்கேன் செய்யும், ஒரு நிமிடத்தில் 160 பக்கங்களையும் ஸ்கேன் செய்யும் திறன் கொண்டது அந்தக் கருவி.

பார்வைத்திறன் குறையுள்ள மாற்றுத் திறனாளிகள் கேட்கும் நூல்களை மின்நூல்களாக மாற்றித் தருகிறேன். தருமபுரியில் அரசுக் கல்லூரியின் முதல்வராக உள்ள கண்ணன் என்பவருக்காக 200 நூல்களை மின் நூல்களாக மாற்றித் தந்திருக்கிறேன்.

இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாக, 2023-இல் 'விரல்மொழியின் நூல் திரட்டு' என்ற 'கட்செவி அஞ்சல்' (வாட்ஸ்ஆப்) குழுவை உருவாக்கி ரூ. 500 மட்டுமே கொடுத்து உறுப்பினராக சேர்ந்து கொண்டு அவர் விரும்பும் நூலை அனுப்பி வைத்தால் அவர்கள் படிக்க வசதியாக மின்நூலாக மாற்றி அனுப்பி வைக்கிறேன்.

நிறைய நூல்கள் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ளோரும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாற்றுத் திறனாளிகளுக்கும் இந்த வசதி அவசியமாகியிருக்கிறது'' என்கிறார் பொன். சக்திவேல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT