தினமணி கதிர்

ஆண்டுக்கு ஆண்டு...

சுவீடனில் ஆண்டுதோறும் ஓரிடத்தில் புதியதாக ஹோட்டல்கள் கட்டப்படுகின்றன. பழைய ஹோட்டல்கள் காணாமல் போய்விடுகின்றன.

தினமணி செய்திச் சேவை

சுவீடனில் ஆண்டுதோறும் ஓரிடத்தில் புதியதாக ஹோட்டல்கள் கட்டப்படுகின்றன. பழைய ஹோட்டல்கள் காணாமல் போய்விடுகின்றன.

ஆர்க்டிக் வடக்கே கிருணா என்ற பகுதியில் ஓடும் டோர்ன் நதி, குளிர்காலத்தில் உறைந்து கிரிஸ்டல்களாக மாறுகிறது. அப்போது, கலைஞர்களை வரவழைத்து, ஹோட்டல்கள் கட்டப்படுகின்றன. படுக்கை, பார்கள், விளக்குகள் உள்ளிட்டவை கிரிஸ்டல்களில் உருவாக்கப்படுகின்றன. குளிர்காலத்தில் அறையின் வாடகை ஒரு நாளைக்கு இந்திய மதிப்பில் 45 ஆயிரம் ரூபாய்.

வெப்பம் மைனஸ் ஐந்து டிகிரி செல்சியஸ். இதனால் தங்குபவர்களுக்கு வெப்பத்தைத் தாங்கும் உறங்கும் பை வழங்கப்படுகிறது. இது காலத்துக்கேற்ற தாங்கும் கதகதப்பை வைத்திருக்கும். சாப்பாடு தட்டு, டம்ளர் உள்ளிட்டவை கிரிஸ்டல்களிலிருந்து உருவானவை. இரவு வெளியில் உலாவினால் விளக்கில் அற்புத வண்ணக் காட்சிகளை ரசிக்கலாம்.

காலையில் எழுந்து வெளியே வந்தால் குளிர் வாட்டும். 'விறைத்து விடுவோம்' என்று சிலருக்கு தூக்கமே வராது. அறையை நோட்டம் விட்டால் பனியைத் தவிர வேறு எதுவும் இருக்காது. இதுதவிர, பல கைவினைஞர்கள் இங்கு வந்து கிரிஸ்டலில் அழகிய சிற்பங்களை உருவாக்கி, பார்வைக்கு வைத்திருப்பர். அதில் சிறந்தவற்றுக்குப் பரிசுகளை வழங்குவர்.

இங்கும் தீ விபத்து அலாரம் உள்பட பல பாதுகாப்புக் கருவிகள் தயார்நிலையில் இருக்கும். 1989-க்குப் பின்னர்தான் ஹோட்டல் கட்ட ஆரம்பித்தனர். டென்ட் மாதிரி அமைப்பிலும் ஹோட்டல்கள் உண்டு. வெயில் காலத்தில் இவை ஒவ்வொன்றாக உருகி இடமே காலியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் ஸ்டாலின் வருகை: 9 மதுக்கடைகளை மூட உத்தரவு

நரசிம்ம பெருமாள் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பெண் கைது

ராமேசுவரத்தில் நவ. 18-ல் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு! புதிய நீதிக்கட்சித் தலைவருக்கு அழைப்பு!

ஆலங்குடி: 3 மயில்கள் இறப்பு! வனத்துறையினா் விசாரணை!

SCROLL FOR NEXT