முகப்பு
இளைஞர்மணி

வண்ண மீன்கள் வளர்க்க பயிற்சி!

இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகமான "தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம்' நேர்முகப் பயிற்சிகளைக் கொடுத்து வந்தது. நிறைய பேர் படிக்க முன்வந்ததால், 3 மாத அஞ்சல் வழியில் பயிலும்

இளைஞர்மணி

வண்ண மீன்கள் வளர்க்க பயிற்சி!

இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகமான "தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம்' நேர்முகப் பயிற்சிகளைக் கொடுத்து வந்தது. நிறைய பேர் படிக்க முன்வந்ததால், 3 மாத அஞ்சல் வழியில் பயிலும்

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:25 PM
பகிர்:

இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகமான "தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம்' நேர்முகப் பயிற்சிகளைக் கொடுத்து வந்தது. நிறைய பேர் படிக்க முன்வந்ததால், 3 மாத அஞ்சல் வழியில் பயிலும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 15 நாட்களுக்கு ஒருமுறை அஞ்சல் மூலம் பாடங்கள் அனுப்பப்படும். 2 நாட்கள் மீன் பண்ணையில் நேர்முகப் பயிற்சி கொடுத்து, இறுதியில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். இதில் வண்ண மீன் வளர்ப்பும், நன்னீர் மீன் வளர்ப்பும் 3 மாதம், கட்டணம் ரூ. 2000/ ஆகும்.

 வெள்ளை இறால் வளர்ப்பு 3 நாட்கள் நடைபெறும். கட்டணம் ரூ.500 மட்டுமே. நேர்முகப் பயிற்சி மட்டுமே உண்டு. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும். கல்வித் தகுதி / வயது எவ்வித நிபந்தனையும் இல்லை.

 இதற்குரிய விண்ணப்பம் பெற FC & RI, ponneri-tnfu.org யில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணத்திற்கு ஈஈ (வரைவோலை)  Dean. FC &RI, Ponneri எனும் பெயரில் எடுத்து, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். இத்துறை நடத்தும் இதர பயிற்சிகளை மாதவரம் / தூத்துக்குடியில் நடைபெறும் பயிற்சிகள் பற்றி அறியவும் கீழ்காணும் வலைத்தளத்தைப் பாருங்கள்.

fcriponneri.org

முதல்வர்,

மீன் வளத் தொழில் நுட்ப நிலையம்,

திருவொற்றியூர் நெடுஞ்சாலை,

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் - 601 204.

டட்: 044 - 2797 1557, 9003782832

முழு கட்டுரையைப் படிக்க →