முகப்பு
இளைஞர்மணி

கண்ணாடிக் கருவிகள் தயாரிக்க பயிற்சி!

தமிழ்நாடு அரசு ஜவுளி, பட்டு, ரசாயனம், பீங்கான் பொருட்கள் தயாரிப்புக்குப் பயிற்சி அளிப்பதுபோல ஆய்வகங்கள், கல்லூரி / பள்ளி சோதனைச் சாலைகள், மருத்துவப் பரிசோதனை நிலையங்களுக்குத் தேவையான "அறிவியல் கண்ணாடிக் கருவிகள் உற்பத்தி செய்யும் பயிற்சியை' கோவையில் வழங்குகின்றனர்.

Updated On : 26 ஜூலை, 2016 at 4:15 PM
பகிர்:

தமிழ்நாடு அரசு ஜவுளி, பட்டு, ரசாயனம், பீங்கான் பொருட்கள் தயாரிப்புக்குப் பயிற்சி அளிப்பதுபோல ஆய்வகங்கள், கல்லூரி / பள்ளி சோதனைச் சாலைகள், மருத்துவப் பரிசோதனை நிலையங்களுக்குத் தேவையான "அறிவியல் கண்ணாடிக் கருவிகள் உற்பத்தி செய்யும் பயிற்சியை' கோவையில் வழங்குகின்றனர். இதை ஆங்கிலத்தில் ‘Scientific glass manufacturing training' என்பார்கள். 11 மாதப் பயிற்சிக்கு, 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 15 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். 20 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அதே நிலையத்தில் 2 மாத குறுகிய காலச் சான்றிதழ் பயிற்சியும் நடைபெறுகிறது. அதற்கு 8-ஆம் வகுப்பு படித்து, 17 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். ரூ.10 நேரில் செலுத்தி அல்லது ரூ.10 போஸ்டல் ஆர்டருடன் ரூ.5 தபால் தலை ஒட்டிய கவருடன் விண்ணப்பிக்க வேண்டும்.

இதில் 11 மாதப் பயிற்சியில் சேர்பவர்களுக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சிகள் இரண்டும் இலவசம். குறைந்த இடங்கள் இருப்பதால் அரசு ஒதுக்கீட்டு முறைப்படி தேர்வு செய்யப்படுவர். பயிற்சி முடிந்ததும் அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடிந்த உடனேயே வேலை கிடைக்க நல்ல வாய்ப்புகள் உள்ளன. அரசு / வங்கிக் கடன் பெறவும், வெளி மாநில வேலை பெறவும் இச் சான்றிதழ் பயன்படும்.

Advertisement

முழு விவரம் பெற: அரசினர் அறிவியல் கண்ணாடிக் கருவிகள் பயிற்சி நிலையம், அவிநாசி ரோடு, விமான நிலையம் அஞ்சல், கோவை - 641 014.

தொலைபேசி எண்கள்: 0422 - 2627016, 2628324.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.