பிரான்சு நாட்டு செர்பாக் ஆராய்ச்சி படிப்பு ஸ்காலர்ஷிப்
பிரான்சு நாட்டில் இந்திய மாணவர்கள் ஓராண்டு பயிற்சி பெற கல்வி உதவித் தொகை ஜார்ஜ் செர்பாக் எனும் விஞ்ஞானியின் நினைவாக வழங்கப்படுகிறது.
இளைஞர்மணிபிரான்சு நாட்டு செர்பாக் ஆராய்ச்சி படிப்பு ஸ்காலர்ஷிப்
பிரான்சு நாட்டில் இந்திய மாணவர்கள் ஓராண்டு பயிற்சி பெற கல்வி உதவித் தொகை ஜார்ஜ் செர்பாக் எனும் விஞ்ஞானியின் நினைவாக வழங்கப்படுகிறது.
பிரான்சு நாட்டில் இந்திய மாணவர்கள் ஓராண்டு பயிற்சி பெற கல்வி உதவித் தொகை ஜார்ஜ் செர்பாக் எனும் விஞ்ஞானியின் நினைவாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பிரான்சு நாட்டுத் தூதரகம் இதை நிர்வகிக்கிறது.
பேச்சலர் பட்டம், மாஸ்டர் (போஸ்ட் கிராஜுவேட்) பட்டம் பெற்றவர்களுக்கு 3 வகை உதவி பெறும் திட்டங்கள் உள்ளன.
1. ஆராய்ச்சி திட்டம்: பொருளாதாரம், என்ஜினியரிங், சயின்ஸ் மாணவர்களுக்கு (பட்டம் / பட்டமேற்படிப்பு படித்தவர்கள்) பிரான்சு சென்று ஓர் ஆய்வகத்தில் 11 மாதங்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள உதவி.
2. மாணவர்களைப் பரிமாறிக் கொள்ளும் (4 மாதம் மட்டும் - Exchange) திட்டம்.
3. மாஸ்டர் திட்டம்: பிரான்சில் பட்ட மேற்படிப்பு 2 ஆண்டுகள் படிக்க உதவி.
தேர்வு செய்யப்படும் முறை: மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பிரெஞ்ச் மொழி கற்றிருப்பது நலம். இன்டர்வியூ நடத்தித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஸ்காலர்ஷிப்: விஸா கட்டணம் இல்லை. (ரூ.16,500/-) மாத உதவித்தொகை வழங்கப்படும். மருத்துவ இன்சூரன்ஸ், உணவு / உறையுள் வழங்கப்படும்.
முழு விவரம் பெற: http://www.inde.campusfrance.org/en/node/11234 என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
கடைசி நாள்: 31.3.2016