முகப்பு
இளைஞர்மணி

கலை, பண்பாட்டு ஆர்வலர்களுக்கு...!

கலை, பண்பாடு வளர்ச்சியடைய தமிழ்நாடு அரசு பல திட்டங்களை வைத்துள்ளது. பல சலுகைகள், பயிற்சிகளை அளித்து வருகிறது.

இளைஞர்மணி

கலை, பண்பாட்டு ஆர்வலர்களுக்கு...!

கலை, பண்பாடு வளர்ச்சியடைய தமிழ்நாடு அரசு பல திட்டங்களை வைத்துள்ளது. பல சலுகைகள், பயிற்சிகளை அளித்து வருகிறது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:

கலை, பண்பாடு வளர்ச்சியடைய தமிழ்நாடு அரசு பல திட்டங்களை வைத்துள்ளது. பல சலுகைகள், பயிற்சிகளை அளித்து வருகிறது. இதற்காக பல மையங்கள் செயல்படுகின்றன. அவற்றைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

கலைப் பணிகளை ஒருங்கிணைக்க, அரசின் கலைத் திட்டங்களைச் செயல்படுத்த, தொன்மைக் கலைகளைக் குறித்து விழிப்புணர்வு உண்டாக்க அரசினால் இவை உருவாக்கப்பட்டன.

1. கலை விழாக்களை நடத்துதல் 2. கலைஞர்களுக்கு விருது வழங்குதல் 3. நாட்டுப்புறக் கலைகளை ஊக்குவித்தல் 4. போட்டிகள் நடத்துதல் 5. பயிற்சி அளித்தல் 6. ஓவிய / சிற்ப பயிற்சி / கண்காட்சி நடத்துதல் 7. அரசு இசைப்பள்ளி நிர்வாகம் 8. ஜவஹர் சிறுவர் மன்றம் 9. நாட்டுப்புறக் கலைஞர் நல வாரியம் மூலமாக உதவுதல்... இப்படி பல சேவைகளைச் செய்கிறது.

தமிழ் இசை நாடக மன்றம், தென்னக பண்பாடு மையம் (தஞ்சை) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து (1) தமிழிசை விழா (2) கார்த்திகை ஒளிவிழா (3) வைகுண்ட ஏகாதசி விழா (4) பாவை விழா (5) சாரல் விழா (6) கோடை விழா என பல விழாக்களை, மத நல்லிணக்கத்தை உண்டாக்கும் விழாக்களை நடத்துகிறது.

முழு விவரங்களுக்கு: http://artandculture.tn.gov.in/schemes.html

1. மண்டல கலை பண்பாட்டு மையம், 73அ, மேட்டு தெரு, காஞ்சிபுரம் -1. தொலைபேசி: 044-2723 1339

2. மண்டல கலை பண்பாட்டு மையம், 5,மணிமேகலை தெரு, முத்தமிழ் நகர், மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் - 7. தொலைபேசி: 04362-240252.

3. மண்டல கலை பண்பாட்டு மையம், சாரதா கல்லூரி சாலை, அழகாபுரம், சேலம் - 638 006. தொலைபேசி: 0427 -2442197

4. மண்டல கலை பண்பாட்டு மையம், காஜாநகர், திருச்சி - 20.

தொலைபேசி: 0431-24223122.

5. மண்டல கலை பண்பாட்டு மையம், திருநெல்வேலி-7. தொலைபேசி: 0462 -2553890

6. மண்டல கலை பண்பாட்டு மையம், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகம், பசுமலை, மதுரை. தொலைபேசி:0452-2535420.

முழு கட்டுரையைப் படிக்க →