முகப்பு
மகளிர்மணி

அறிந்ததும் - அறியாததும்

திரைப்படங்களில் நடித்துப் புகழும் பொருளும் சம்பாதித்த பெண் நட்சத்திரங்களில் கோயில் கட்டியவர் இருவர்.

Updated On : 29 பிப்ரவரி, 2016 at 4:32 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:10 PM

கோயில் கட்டியவர்கள்

திரைப்படங்களில் நடித்துப் புகழும் பொருளும் சம்பாதித்த பெண் நட்சத்திரங்களில் கோயில் கட்டியவர் இருவர். ஒருவர் மறைந்த குணச்சித்திர நடிகை பண்டரிபாய். சென்னை வடபழனியில் பாண்டுரங்க விட்டலின் ஆலயத்தைக் கட்டி அதன் நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றிருந்தார். கோயிலின் அருகிலேயே அவர் வசித்தும் வந்தார்.

அதேபோன்று  பழம்பெரும் நடிகை ஜமுனாவும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த "துக்கிராளா'வில் நவக்கிரக கோயில் கட்டியிருக்கிறார்.

Advertisement

"திரைக்குப் பின்னால்' என்ற நூலிலிருந்து.

- பி.எஸ்.சின்னப்பாண்டியன்

••

சரோஜினியின் சாதுர்யப் பேச்சு

கவிக்குயில் சரோஜினி நாயுடு, ஒரு முறை லாகூர் கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றுவதற்காகச் சென்றிருந்தார். அவரை வரவேற்றுப் பேசிய அக்கல்லூரி மாணவர் மன்றத்தின் செயலாளராக இருந்த மாணவர் ஒருவர் கீழ்க்கண்ட வாறு பேசினார்.

 “I have great pleasure in welcoming in our midsti ndia’s most public woman’  இந்தியாவில் மிகவும் செல்வாக்குப் பெற்ற பெண்'' என்ற அர்த்தத்தில் ndia’s most public woman’ என்று குறிப்பிட்டார்.

ஆனால் இதன் பொருள் தவறானது.

சரோஜினி நாயுடு அந்த மாணவர் தவறாகச் சொன்னதைக் கேட்டு கோபமோ, வருத்தமோ கொள்ளவில்லை.

அவர் தனது பதிலுரையின் போது, "" அந்த மாணவர் கூறியது போல் என்னால் செல்வாக்கு பெற இயலாது''  ஆங்கிலம் ஓர் ஆபத்தான மொழி. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் கூட தவறான அர்த்தங்களையும், விபரீத விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். எனவேதான் அந்த ஆங்கில மொழிக்கு உரியவர்கள் இந்த நாட்டில் இருக்கக் கூடாது என்று நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்'' என்றார்.

 கூட்டத்திலுள்ள அனைவரும் சரோஜினி நாயுடுவின் சாதுர்யமான விளக்கத்தைக் கேட்டு மகிழ்ந்து கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள்.

"காலத்தை வென்றவர்கள் வாழ்விலே' என்னும் நூலிலிருந்து


மேடம் கியூரி சொன்னது:

சட்டமும் நீதியும் இருபெரும் சக்திகள். இரண்டும் சேர்ந்தால் அமைதி பிறக்கும். ஆனால் ஒன்றோடொன்று மோதினாலோ குழப்பமும் அழிவும்தான் உண்டாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.