முகப்பு
மகளிர்மணி

அறிந்ததும் - அறியாததும் : என் தவிப்பிற்கு  ஒரு வடிகாலாய்!

என் வாழ்க்கையில், நான் அறிந்த வரையில், நினைக்கவும் அஞ்சத்தக்கதான அனுபவங்கள் எனக்குச் சித்தித்திருக்கின்றன. இந்த அனுபவங்கள் என்

Updated On : 29 மார்ச், 2016 at 1:02 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:23 PM

என் வாழ்க்கையில், நான் அறிந்த வரையில், நினைக்கவும் அஞ்சத்தக்கதான அனுபவங்கள் எனக்குச் சித்தித்திருக்கின்றன. இந்த அனுபவங்கள் என் ஒருத்திக்கு மாத்திரமேயன்றி சமூகம் முழுமையும் தழுவிப் பயன் விளைவிக்கும் என்று நான் நம்பினேன். இப்போதும் நம்புகிறேன்; அந்த அனுபவங்களின் திரட்சியைச் சமூக நலம் கருதி, எனக்குக் கை வந்திருப்பதாக நான் கருதும் எழுத்தின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.

 வாழ்க்கையில் நான் காயங்கள் பட்டேன். ஆனாலும், அவை என்னை வடுப்படுத்தவில்லை; மாறாக, அவை என்னை வலிமைப்படுத்தின. அபிமன்யுவைப் போல் நான் வியூகமிடப்பட்டுத் தாக்கப்பட்டிருக்கிறேன். அது தாக்குதல் மட்டுமல்ல; ஈவிரக்கமற்ற குரூரம். அந்தக் குரூரங்களும் கொடுமைகளும் என்னை அடித்து வீழ்த்தவில்லை; கவலையால் ஓலமிடவில்லை. மாறாக அவை வளர, வளர நான் அவற்றுக்கு மேலாக வளர்ந்தேன். இந்த வேளையில்தான் என் மனதுக்குள் அதுவரை உறங்கிக் கிடந்த சிறுபொறி பெரு நெருப்பாய்ப் பரவியது.  அந்த சமயத்திலேதான் எனக்கு எழுத வேண்டும் என்கிற மூர்க்கம் - அதை மூர்க்கம் என்பதைத் தவிர வேறு வார்த்தைகளால் குறிக்க முடியாது... உண்டாயிற்று.

 என் உள்ளக் கிடக்கையை எல்லாம் கொட்டித் தீர்க்க வேண்டும் என்கிற என் தவிப்பிற்கு ஒரு வடிகாலாய் நான் தேடிக் கொண்டதுதான் இந்த எழுத்துத்துறை. என்னை நெருக்கிய பிரச்னைகளின் இருளிலே நான் தடுமாறாமல் ஒளி காட்டும் வெளிச்சமாய், ரணகாயமுற்ற இதயத்தின் வேதனைக்கு மாற்று மருந்தாய் வந்த எழுத்து வடிவில் என் மனம் வடிகால் கண்டது.

Advertisement

கல்பனாதாசன் தொகுத்த "கண்ணதாசன் முதல்...' நூலில்  திலகவதி ஐ.பி.எஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.