முகப்பு
மகளிர்மணி

நர்சுகள்... பல சுவையான தகவல்கள்

உலகிலேயே மிகவும் போற்றத் தக்க; புனிதமான தொழில் எது? என்றால், அது நர்ஸ் பணி என்றுதான் பதில்வரும்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:20 PM
பகிர்:

உலகிலேயே மிகவும் போற்றத் தக்க; புனிதமான தொழில் எது? என்றால், அது நர்ஸ் பணி என்றுதான் பதில்வரும்.

 முழு அர்ப்பணிப்போடு தங்களை ஈடுபடுத்திக் கொள்வதின் மூலம்  பல லட்சம் நோயாளிகளை காப்பாற்றியும், குணப்படுத்தியும், மறு வாழ்வுக்கு வழி செய்பவர்கள் அவர்கள்.

 டாக்டர்களுடன் இணைந்து, அவர்களுடைய கட்டளையை சிரமேற் கொண்டு அதே சமயம் நோயாளிகளின் மன நிலையை அறிந்து அவர்களுடன்  நட்பு பாராட்டி, பல சோதனைகளுக்கு தயார் செய்து, தைரியப்படுத்தி வெற்றி காண்கிறது இந்த இனம்.

 கிறிஸ்து பிறப்பதற்கு 5 நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஆண் நர்சுகள் பணி புரிந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

 16-ஆம் நூற்றாண்டில் ப்ராடஸ்டன்ட் கிறிஸ்தவ மத பிரிவினர்தான் முதன்முதலாக, மருத்துவமனைகளை துவக்கி அதில் சேவைக்கு மகளிரையும் ஈடுபடுத்தினர்.   பிரபலமான நர்ஸ் என புகழப்படுபவர் ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல். இன்றும் இவரது பிறந்தநாள்தான் உலக நர்சுகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

 1836- இல் சில இயக்கங்கள் சுய நர்சிங் முயற்சியில் ஈடுபட்டன.

 Little sisters of the poor

 Sisters of mercy

 Sisters of St. marry.

 St. Francis health services

 Sisters of charity

ஆகியவை நர்சிங் சேவையில் ஈடுபட்டதின் விளைவு அடுத்த 50 ஆண்டுகளில் இவர்கள் சார்ந்த நர்சுகள் 5000 பேர் ஐரோப்பாவின் பல நகரங்களை வியாபித்திருந்தனர்.

 19- ஆம் நூற்றாண்டின் பின் பகுதியில் தான் மேலைநாடுகளில் ராணுவத்தில் நர்சுகள், சேவைக்காக இணைக்கப்பட்டனர்.

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றில் பிரிட்டிஷ் நர்சுகள் செய்த சேவை உலக அளவில் பாராட்டப்பட்டது.

 அமெரிக்க ராணுவம் மற்றும் கப்பற்படையில் ஏராளமான நர்சுகள் பணி புரியத் தொடங்கினர்.

 நாசி பிரிவினர், தங்களுக்கென ஆழ்ர்ஜ்ய் சன்ழ்ள்ங் என்ற அமைப்பை வைத்திருந்தனர். இதில் சுமார் நாற்பதாயிரம் பேர் இருந்தனர்.

 20- ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலங்களில் நர்சிங் என்பது பெண்கள் தொழிலாகவும், டாக்டர் என்பது ஆண்கள் தொழிலாகவும் கருதப்பட்டது.

 பிறகு இந்த நிலை மாறியது. ஆனால் இன்று பெண் டாக்டர்கள் பெருகிய அளவு,  ஆண் நர்சுகள் பெருகவில்லை.  உங்களுக்கு தெரியுமா? போர்ச்சுகல்.. செக் குடியரசு மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் நர்சுகளில் 20 சதவிகிதம் ஆண்கள் தான். கனடா... அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆண்/ பெண் நர்ஸ் விகிதம் 1:19 என்ற விகிதத்தில்  தான் உள்ளது. அமெரிக்காவில் பணிபுரியும் மொத்த நர்சுகளில் 91 சதவிகிதம் பெண்கள்தான்.  கென்யா... தென்னாப்பிரிக்கா மற்றும் தாய்லாந்து நாடுகளில் கிராமப்புறங்களில் சென்று வேலை செய்யும், நர்சுகளுக்கு கூடுதல் சம்பளம், அலவன்ஸ் உண்டு.

இந்தியாவில் 1597  நர்சிங் பள்ளிகள் உள்ளன.

 833 பட்டப்படிப்பு நர்சிங் கல்லூரிகளும் 97 பட்ட மேற்படிப்பு நர்சிங் கல்லூரிகளும் உள்ளன.

 இவற்றின் மூலம் 41,650 பட்டதாரிகள் மற்றும் 1,940 பட்ட  மேற்படிப்பு படித்தவர்கள் நர்சுகளாக வெளிவருகின்றனர்.

 இந்தியாவிற்கு 10.43 லட்சம் நர்சுகள் தேவை. ஆனால் பணிபுரிவதோ 6.84 லட்சம் பேர்தான். மீதி 3.59 லட்சம் நர்சுகள் நிரப்பப்பட வேண்டும். அப்போது தான் ஆஸ்பத்திரி நோயாளிகளை திறம்பட பார்க்க இயலும்.

 ஆனால் இந்தியாவில் பட்டம் பெறும் நர்சுகளில் 20 சதவிகித்தினர், அதிக சம்பளம், சௌகர்யங்களை முன்னிட்டு வெளிநாடு சென்று விடுகின்றனர்.  பிரிட்டனில் வேலைக்கு  ரிஜிஸ்டர் செய்துள்ள 33,250 பேரில் 12,500 பேர் வெளிநாட்டினர். இதில் இந்தியர்கள் தான் மிகமிக அதிகம்.

 எங்கும் கேரள நர்சுகளுக்கே முதல் வரவேற்பு. இதற்கு காரணம் அவர்களின் அர்ப்பணிப்பு.

 இந்தியாவில் நர்சிங் சார்ந்த செயல்பாடுகளை இந்தியன் நர்சிங் கவுன்சில்தான் கவனிக்கிறது.

 கேரளாவில் யுனைடெட் நர்சிங் அசோசியேட் 2011-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி முதல் செயல் படுகிறது. இதில் 4,79,000 உறுப்பினர்கள் உள்ளனர். நர்சுகள் சார்ந்த தேவைகளை மேம்படுத்துவதுதான் இதன் நோக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.