மகளிர்மணி

உதட்டை கவனியுங்கள்!

தினமணி

* வைட்டமின் குறைபாட்டால் உதட்டின் ஓரங்களில் புண்கள் வரலாம். இதற்கு உணவில் கீரைகள், பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* வாய் ஓரங்களில், உதட்டில் ஏற்படும் புண்கள், கொப்பளங்கள் மறைய வைட்டமின் "சி' சத்துகள் நிறைந்த சன்ஸ்கிரீன் லோஷனைத் தடவி வரலாம்.

* பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து பூசி வந்தால் உதட்டில் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

* உடலில் கொழுப்புச்சத்து குறையும்போது உதடுகள் சுருங்கி வயதான தோற்றத்தைத் தரும். இதனைத் தவிர்க்க பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவலாம்.

* வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து தடவி வந்தால், உதட்டில் உள்ள வெடிப்புகள் குணமடைந்து, உதடு மென்மையாகும்.

* உதடுகள் ஆரோக்கியத்துக்கு அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* வெயில் மற்றும் மழைக்காலங்களில் அந்த சூழ்நிலைகளுக்கேற்ப உதடுகளைப் பராமரிக்க வேண்டும்.
- கே.பிரபாவதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT