மகளிர்மணி

மீண்டும் கீதா

இதுவரை தண்ணீர்ப் பிரச்னையை மையமாக வைத்து 65 படங்கள் வெளிவந்துள்ளன.

ராதாகிருஷ்ணன்

இதுவரை தண்ணீர்ப் பிரச்னையை மையமாக வைத்து 65 படங்கள் வெளிவந்துள்ளன. தற்போது கன்னடத்தில் "மார்ச் 22' என்ற பெயரில் ஒரு படம் வெளிவந்துள்ளது. படத்தின் முக்கியக் கரு தண்ணீர் பிரச்னை! ஓர் இடத்தில் இரு வேறு மதம் சார்ந்த மக்களுக்குள் தண்ணீர் எடுப்பதில் சிக்கல். பிறகு இந்தப் பிரச்னை மனிதாபிமான முறையில் எப்படி முடிவுக்கு வருகிறது என்பதைப் படம் சொல்கிறது. இதனைப் பிரபல இயக்குநர் கொட்லு ராமகிருஷ்ணா இயக்கியுள்ளார். கதை, வசனத்தையும் அவரே எழுதியுள்ளார். இந்தப் படத்தில் நடிகை கீதாவுக்கு முக்கியப் பாத்திரம். 1997-ஆம் ஆண்டு ஓர் ஆடிட்டரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவின் நியூஜெர்சியில் குடியேறியவர் நடிகர் கீதா. பிறகு மனம் மாறி மீண்டும் நடிக்க வந்தார். தமிழில் "உனக்கும் எனக்கும்', "சந்தோஷ் சுப்ரமணியம்', "அழகிய தமிழ்மகன்' படங்களில் நடித்தவர். கன்னடத்தில் "மார்ச் 22 ' இவருக்கு மூன்றாவது படம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT