மகளிர்மணி

ஹாலிவுட் திரைப்படங்களில் கலக்கும் இந்திய நடிகைகள்!

DIN

"ஹாலிலிவுட் திரைப்பட உலகைக் கலக்கிக் கொண்டிருக்கும் இந்திய நடிகைகள் யார் யார் தெரியுமா'' என்று கேட்டால், பலரும்... "இதுகூட தெரியலைன்னா எப்படி... நம்ம பிரியங்கா சோப்ராவும், தீபிகா படுகோனும் நடிச்சு சாதனை செய்திட்டாங்களே'' என்பார்கள். ஹாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகைகளின் பட்டியல் பிரியங்கா, தீபிகாவுடன் நிறைவு பெறவில்லை. குறைந்தது பத்து நடிகைகள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அமெரிக்க, இங்கிலாந்து, கனடா திரைப்படங்கள், டிவி தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். யார் யார் என விவரம் தெரிந்து கொள்வோமா..?

* அர்ச்சனா பஞ்சாபி. "அர்ச்சீ 'என்று செல்லமாக அழைக்கப்படுபவர். இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் படங்களில் நடித்து வருகிறார். இவரது பெற்றோர்கள் கோவிந்த் -பத்மா. இந்தியாவைச் சேர்ந்த சிந்தி இனத்தவர்கள். இங்கிலாந்தில் குடியேறி நிரந்தரமாக தங்கிவிட்டதால் அர்ச்சனாவும் இங்கிலாந்தின் குடிமகள் மற்றும் நடிகையாகி உள்ளார். 

* ஃபிரைடா செலினா பின்டோ. இந்தியர்கள் மறக்க முடியாத பெயர். "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் அறிமுகமாகி நடித்திருந்தவர். 2011- ஆம் ஆண்டில் வெளியான "ரைஸ் ஆஃப் தி பிளானட் ஆஃப் த ஏப்ஸ்' படத்திலும் நடித்திருக்கிறார். மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இந்தியாவில் முன்னணி நடிகையாக ஆகாமலேயே ஹாலிவுட்டில் தனக்கென்று ஓர் இடம் பிடித்திருப்பவர்.

* சித்தார் இசை மேதை பண்டிட் ரவி ஷங்கரின் மகள் ஒரு ஹாலிவுட் நடிகை என்றால் நம்ப முடிகிறதா ? கீதாலி நோரா ஜோன்ஸ். பிரபல அமெரிக்கப் பாடகர். ஒன்பது கிராமி விருதுகளைப் பெற்றிருப்பவர். இவரது ஆல்பங்கள் லட்சக்கணக்கில் உலகம் முழுவதும் விற்பனையாகின்றன. அமெரிக்க இசை ஒருங்கிணைப்பாளர் சூ ஜோன்ஸ் -பண்டிட் ரவி ஷங்கர் தம்பதியரின் வாரிசுதான் நோரா ஜோன்ஸ். 

* நெளரீன் டியூவல்ப். அமெரிக்க நடிகை. "வெஸ்ட் பேங்க் ஸ்டோரி' , "கோஸ்ட்ஸ் ஆஃப் கேர்ள் ஃபிரண்ட்ஸ் பாஸ்ட்', "தி பேக் -அப் பிளான்' போன்ற படங்களில் நடித்திருப்பவர். மும்பையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர். ஆங்கிலம், ஹிந்தி, உருது, குஜராத்தி மொழிகள் இவருக்கு தண்ணி பட்ட பாடு.

• இந்தியாவில் பிறந்து வளர்ந்து கனடா நாட்டு நடிகையாக மாறியிருப்பவர் நஸ்னீன் கான்ட்ராக்டர். இவர் இந்திய - பார்சி பெற்றோருக்குப் பிறந்தவர். பெற்றோர் நஸ்னீன் ஏழு வயதாக இருக்கும் போது நைஜீரியாவில் குடியேறி பிறகு கனடாவிற்கு குடி பெயர்ந்தார்கள். 

• பத்ம பார்வதி லட்சுமி வைத்தியநாதன். சுருக்கமாக பத்ம லட்சுமி என்று அழைக்கப்படுபவர். பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியுடன் இணைத்துப் பேசப்பட்டவர். ஒரு இத்தாலிய படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர். அமெரிக்க டிவி நிகழ்ச்சிகளை அளித்து வருபவர். சென்னை இவரது பூர்வீகம். 

• இங்கிலாந்தில் யாரைக் கேட்டாலும் பர்மீந்தர் கவுர் நக்ரா பற்றி தெரியும். இங்கிலாந்து படங்கள், டிவி ஷோக்களில் நடித்து பிரபலமாகியிருப்பவர் பர்மீந்தர் கவுர் நக்ரா. சீக்கிய பெற்றோருக்குப் பிறந்தவர். பஞ்சாபிலிருந்து இங்கிலாந்தில் குடியேறியதால் பர்மீந்தரும் இங்கிலாந்தின் குடிமகளாகி இருக்கிறார்.

• அமெரிக்க சயின்ஸ் ஃபிக்ஷன், ஆக்ஷன் படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்து பெற்றிருப்பவர் ரோனா மித்ரா. மாடல் அழகி, பாடகி, பாடலாசிரியர் என்ற நிலைகளில் பயணிப்பவர். அப்பா மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். அம்மா ஐரிஷ் நாட்டுக்காரர்.

• அமெரிக்க திரைப்படவுலகில் "ஏபிசிடி' படம் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்தப் படத்தைத் தயாரித்தவர் ஷீத்தல் ஷேத். ஷீத்தல் நடிப்பதுடன் படங்களையும் தயாரிக்கிறார். "அமெரிக்கன் சாய்' என்பது இவர் தயாரித்த இன்னொரு படம். அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் பிறந்த ஷீத்தலுக்கு, குஜராத் பூர்வீகம்.

• ஜுலைகா ராபின்சன், இன்னொரு புகழ் பெற்ற இங்கிலாந்துப் பாடகி, திரைப்பட, டிவி நடிகை. இந்திய வம்சாவளி அம்மாவையும், இங்கிலாந்தைச் சேர்ந்த அப்பாவையும் பெற்றோராகக் கொண்டவர். பிறந்தது லண்டன் என்றாலும் வளர்ந்தது தாய்லாந்திலும், மலேசியாவிலும். 
- சுதந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT