மகளிர்மணி

இ​லக்கு மாறாத கனவே கைகூ​டும்!

ஆரம்​பத்​தேர்வு, பிர​தா​னத்​தேர்வு, நேர்​கா​ணல் என மூன்று நிலை தேர்வு. 20 லட்சம் பேரில் 10 ஆயி​ரம் பேர் மட்டும் பிர​தா​னத்​தேர்​வுக்​கும், நேர்​கா​ண​லின் இறு​தி​யில் ஆயி​ரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெறு

ந.முத்துமணி


ஆரம்​பத்​தேர்வு, பிர​தா​னத்​தேர்வு, நேர்​கா​ணல் என மூன்று நிலை தேர்வு. 20 லட்சம் பேரில் 10 ஆயி​ரம் பேர் மட்டும் பிர​தா​னத்​தேர்​வுக்​கும், நேர்​கா​ண​லின் இறு​தி​யில் ஆயி​ரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெறு​வார்​கள். இது தான் ஐஏ​எஸ் தேர்​வின் முக்​கி​யத்​து​வம். கடின உழைப்பு, விடா​மு​யற்சி, தீராத இலட்​சி​ய​வேட்கை, தள​ராத ஊக்​கம், தங்​குத்​த​டை​யில்​லாத படிப்பு ஆகி​ய​வற்​றின் உச்​சம் தான் ஐஏ​எஸ். அப்​ப​டிப்​பட்ட எண்​ணத்​து​டன் ஐஏ​எஸ் தேர்​வில் தேசிய அள​வில் 36-ஆவது இட​மும், புதுச்​சே​ரி​யில் முத​லி​ட​மும் பிடித்து சாதனை படைத்​தி​ருக்​கி​றார் புதுச்​சேரி மாநி​லம், காரைக்​கால் நகரை சேர்ந்த ஆர்.​ச​ரண்யா.

8 ஆண்​டு​க​ளுக்கு பிறகு காரைக்​கால் நக​ரில் இருந்து ஐஏ​எஸ் தேர்​வில் வெற்​றி​வா​கைச்​சூ​டி​யி​ருக்​கும் சரண்​யா​வின் கனவு நன​வா​னது எப்​படி? 

சின்​ன​வ​ய​தில் ஐஏ​எஸ் ஆகும் கனவு எனக்கு இருந்​த​தில்லை. மருத்​து​வர், விஞ்​ஞானி, பொறி​யா​ளர் போன்​ற​வர்​களைப் பார்த்​தால் அவர்​களைப் போல ஆக வேண்​டும் என்ற ஆசை ஏற்​ப​டும். அவ்​வப்​போது அது மாறிக்​கொண்டே இருக்​கும். இளம் வய​தி​லேயே ஏழ்​மை​யில் தவித்​த​தால், யாருக்​கா​வது உத​வும் வேலையைச் செய்ய வேண்​டும் என்ற ஆசை மட்டுமே ஆரம்​பத்​தில் இருந்தே மன​தில் ஊறிப்​போ​யி​ருந்​தது.

கல்​லூரி படிக்​கும்​போது ஐஏ​எஸ் கன​வாக உரு​வெ​டுத்​தது. அப்பா ராமச்​சந்​தி​ரன் தான், ஐஏ​எஸ் ஆகும் திறமை, ஆற்​றல் என்​னில் ஒளிந்​தி​ருப்​ப​தாக அடிக்​கடி கூறி என்னை ஊக்​கப்​ப​டுத்தி, அந்த கனவை ஆழ​மாக மன​தில் ஊன்ற உந்​து​த​லாக இருந்​தார். பண​நெ​ருக்​கடி இருந்​த​போ​தும் என் அக்கா அபி​ந​யாவை எம்.டி., தம்பி மால் மரு​கனை எம்.​பி.​பி.​எஸ். வரை​யும் படிக்க வைத்​தி​ருக்​கி​றார். எங்​கள் மூவ​ரின் முன்​னேற்​றத்​தில் அப்பா, அம்​மா​வின் பங்கு சொல்​லால் சொல்லி முடிக்க முடி​யாது. 

இளங்​கலை பட்டம்​பெற்ற பிறகு சென்னை சென்று ஐஏ​எஸ் அகா​தெ​மி​யில் சேர்ந்​த​பி​ற​கு​தான் மூன்​று​நிலை தேர்வு இருப்​பது தெரிந்​தது. முதல் முறை ஆரம்ப, பிர​தா​னத்​தேர்​வு​க​ளில் தேர்ச்​சி​பெற்​றேன். நேர்​கா​ண​லில் வெல்​ல​மு​டி​ய​வில்லை. இரண்​டா​வ​து​மு​றை​யும் இதே தான் நடந்​தது. முயற்சி திரு​வி​னை​யாக்​கும், விடா​மு​யற்சி வெற்​றியைத் த​ரும் என மன​தில் பதித்​துக்​கொண்டு, மூன்​றா​வது முறை தேர்​வுக்கு தயா​ரா​னேன். 

ஒன்​றரை ஆண்​டு​கா​லம் வீட்டி​லேயே முடங்​கிக்​கி​டந்​தேன். எப்​படி, என்ன, எவ்​வ​ள​வு​நே​ரம் படிப்​பது என்று திட்ட​மிட்​டுக் கொண்​டேன். 

இணை​ய​வ​ழித்​தேர்​வு​களை எழுதி, என் அறி​வுத்​தி​றனை மதிப்​பிட்டு, மேம்​ப​டுத்​திக்​கொண்​டேன்.  தேர்​வின் முடிவு பற்​றிக்​க​வ​லைப்​ப​டா​மல் என்னை தயார்ப்​ப​டுத்​திக்​கொள்​வ​தில் மட்டுமே அக்​க​றை​யாக இருந்​தேன். தேர்​வுக்கு முன்பே நம்​பிக்​கை​யோடு இருந்​தேன். அதன்​ப​டியே தேர்​வில் வெற்​றி​யும் கண்​டுள்​ளேன். 

என் அம்மா அடிக்​கடி கூறி​வந்​தது போல, ஐஏ​எஸ் அதி​கா​ரி​யாக பிற​ருக்கு உத​வப்​போ​கி​றேன். கிரா​மப்​புற மக்​க​ளின் வாழ்க்​கைத்​த​ரத்தை மேம்​ப​டுத்த வேண்​டும் என்​பதே என் பணிக்​கான இலக்​காக கொண்​டுள்​ளேன்'' என்​றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மொபெட்டிலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியா்கள் இருவா் கைது

பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது! - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT