முகப்பு
மகளிர்மணி

உள்துறை அமைச்சராக பூர்வகுடிபெண்!

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் ஜோபைடனின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பூர்வகுடியைச் சேர்ந்த டெப் ஹாலாண்டைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Updated On : 30 டிசம்பர், 2020 at 6:00 AM
பகிர்:


அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் ஜோபைடனின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பூர்வகுடியைச் சேர்ந்த டெப் ஹாலாண்டைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க வரலாற்றில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்கும் முதல் பூர்வகுடியினத்தவர் என்ற பெருமையை டெப் ஹாலாண்ட் பெறுவார். கேபினட் அந்தஸ்து கொண்ட பதவியை ஏற்கவிருக்கும் முதல் அமெரிக்கப் பூர்வகுடி அமைச்சராகவும் இருப்பார்.

நியூ மெக்ஸிகோ முதலாவது மாவட்ட பிரதிநிதிகள் சபை உறுப்பினரான டெப் ஹாலாண்டுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என அமெரிக்க பூர்வகுடி அமைப்புகள் ஜோபைடனை வலியுறுத்தி வந்தன.

Advertisement

இதுகுறித்து டெப் ஹாலாண்ட் கூறுகையில், ""ஜோபைடன் - கமலா ஹாரிஸ் அமைச்சரவையில் இடம் பெறுவதில் பெருமை கொள்கிறேன். சுற்றுச் சூழலை பாதுகாக்கும் அவர்களது நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும். முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் ஆட்சியில் பூர்வகுடியினருக்கும், அரசுக்கும் இடையே இருந்த பிளவைப் போக்குவதற்கும் பாடுபடுவேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.