மகளிர்மணி

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் புதிய பெண் நீதிபதி!

தினமணி

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ரூத் பேடர் கின்ஸ்பர்க் தனது 87-ஆவது வயதில், உடல் நலக்குறைவால் கடந்த மாதம் காலமானார்.

இதனால் காலியான அந்தப் பொறுப்புக்கு முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஏமி கோனி பாரெட்டை நியமிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்தார்.

எனினும் வலதுசாரி சிந்தனைக் கொண்டவராகக் கருதப்படும் ஏமிக்கு எதிராக ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், பாரெட்டின் நியமனத்துக்கு செனட் சபையின் நீதிமன்ற விவகாரக் குழு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. அதன் தொடர்ச்சியாக செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், ஏமிக்கு ஆதரவாக 52 வாக்குகளும், எதிராக 48 வாக்குகளும் பதிவாகின.

இதனால் ஆளும் குடியரசுக் கட்சி, செனட் சபையில் ஏமியின் நியமனத்துக்கு ஒப்புதல் பெற்றது.

செனட் சபை ஒப்புதல் அளித்த சில மணி நேரங்களில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதியாக ஏமி பாரெட் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு நீதிபதி கிளாரன்ஸ் தாமஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதன் மூலம் அமரிக்க உச்சநீதிமன்ற நீதிமன்றத்தின் 115-ஆவது நீதிபதியாக ஏமி பாரெட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 9 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் உள்ளன. அங்கு உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கும் நபர், வாழ்நாள் வரை அப்பதவியில் நீடிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT