பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க...
காட்டன் பருத்தி ஆடைகளை அணிந்து கொண்டு மட்டுமே பட்டாசுகளைக் கொளுத்த வேண்டும்.
காட்டன் பருத்தி ஆடைகளை அணிந்து கொண்டு மட்டுமே பட்டாசுகளைக் கொளுத்த வேண்டும்.
திறந்தவெளியில் பட்டாசுகளை வெடியுங்கள் கூரை வெய்ந்த குடிசை அருகில் இருந்தால் பட்டாசுகளை கொள்ளுத்தும் போது மிகமிக கவனமாக இருங்கள்.
பட்டாசுகளைக் கொளுத்துவதற்கு நீண்ட ஊதுவத்தியை பயன்படுத்தவும். தீப்பெட்டி, மெழுவர்த்தியை பயன்படுத்தாதீர்கள்.
குழந்தைகள் வெடிகளை வெடிக்கும்போது,
எத்தனை வேலைகள் இருந்தாலும், பெரியவர்கள் தங்களின் மேற்பார்வையில் பட்டாசுகளை வெடிக்கச் செய்வது நல்லது.
குழந்தைகள் சட்டை, பேண்ட் பாக்கெட்டுகளில் பட்டாசுகளை அடுக்கி வைத்துக் கொண்டு வெடி வெடிக்க எக்காரணம் கொண்டும் அனுமதிக்காதீர்கள்.
பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு அருகில் குறைந்த பட்சம் ஒரு பக்கெட் தண்ணீராவது இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
கைக்குழந்தை உள்ள வீட்டில் பட்டாசுகள், வெடிகள் வெடிக்கும்போது குழந்தையின் காதில் சிறிது பஞ்சு வைத்து விட வேண்டும். இதனால் குழந்தை பயந்துபோய் அழாமல் இருக்கும்.
இளைஞர்கள் செல்பேசியில் பேசிக் கொண்டே பட்டாசுகளைக் கொளுத்துவதை நிச்சயம் தவிர்க்கவும். அச்செயல் ஆபத்தை நீங்களே விலைக்கு வாங்குவது போலாகிவிடும்.
சத்தமான வெடிகள், நீண்ட சரவெடிகளை சாலையில் கொளுத்தாமல் திறந்தவெளி மைதானத்தில் கொளுத்துங்கள்.
புகையை அதிகம் கிளப்பும் பாம்பு மாத்திரைகளை வீட்டுக்குள் கொளுத்த வேண்டாம். வீட்டில் வயோதிகர்கள் இருந்தால் அப்புகையால் அவர்களுக்கு சுவாசப் பிரச்னைகள் வரக்கூடும்.
உயரமான பாட்டில்கள், பைப்புகளை மட்டுமே பயன்படுத்தி ராக்கெட்டை வெடியுங்கள். தரையில் வைத்து வெடிப்பது பாதசாரிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
பட்டாசு மருந்து கையோடு குழந்தைகள் பலகாரங்களை சாப்பிடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகள் பட்டாசு வெடித்து முடித்ததும் கட்டாயம் ஹாண்ட் வாஷ் போட்டு கையை கழுவச்சொல்லுங்கள்.