மகளிர்மணி

சின்னத்திரை மின்னல்கள்!

ஸ்ரீ

இயக்குநரை மணந்த நடிகை!

"தெய்வமகள்' தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் உஷா சாய். பின்னர், "சக்தி', "அழகிய தமிழ் மகள்' உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். இவர், சின்னத்திரை இயக்குநர் மற்றும் நடிகரான பிரகாசை காதலித்து வந்தார். ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கரோனா பிரச்னைகள் முடிவுக்கு வந்த பின்னர், திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர். ஆனால், கரோனா முடிவுக்கு வருவதாகத் தெரியாததால், சமீபத்தில் வீட்டிலேயே நெருங்கிய உறவினர், நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

நடிகையான பல் மருத்துவர்!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "நீ தானே என் பொன்வசந்தம்' தொடரில் நாயகியாக அறிமுகமாகியுள்ள தர்ஷனா அசோகன் தனது சின்னத்திரை என்ட்ரி குறித்து கூறியதாவது:

""எனது பூர்வீகம் குன்னூர். பிறந்தது வளர்ந்தது எல்லாம் அங்கேதான்.

சென்னையில் பல் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் போது, இன்ஸ்டாகிராமில் சில போட்டோ ஷூட்களை நடத்தி போட்டோக்களை பதிவிட்டிருந்தேன். அதன்மூலம்தான் "நீ தானே என் பொன்வசந்தம்' தொடரின் வாய்ப்பு வந்தது. சின்ன வயதிலிருந்தே டிவி, சினிமா எல்லாம் பார்க்கக் கூடாது என்று கண்டிப்புடன் வளர்ந்தவள் நான். இந்நிலையில் சின்னத்திரையில் கிடைத்த வாய்ப்பைப் பற்றி வீட்டில் சொன்னதும் மொத்தக் குடும்பமும் எதிர்த்தார்கள்.

"டென்டல் படித்துவிட்டு நடிக்கப் போகக் கூடாது' என்று ஆரம்பத்தில் ஒத்துக்கவே இல்லை. பின்னர் எனது ஆசையைப் புரிந்து கொண்டு சம்மதம் தெரிவித்தார்கள். 100 எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியலில் நடித்ததற்காக, சமீபத்தில் நடைபெற்ற ஜீ தமிழ் விருது விழாவில் "ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு' என்கிற விருது கொடுக்கப்பட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்.

"பல் மருத்துவம் படித்த நீங்கள், எப்போ நோயாளிகளின் பல்லை பிடுங்கப் போகிறீர்கள்' என்று கேட்பவரிடம், இப்போதைக்கு சீரியல் வாய்ப்புகள் ஒரு ஃப்லோவில் போய்ட்டு இருக்கு, அதற்கான நேரம் வந்தால், பார்ப்போம்'' என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT