மகளிர்மணி

நாட்டுச் சர்க்கரையின் நன்மைகள்! 

வெள்ளை சர்க்கரை பயன்பாட்டை குறைத்துக் கொண்டு நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தவும். ஏனெனில் இதில் பல நன்மைகள் இருக்கிறது.

கா.அஞ்சம்மாள்


வெள்ளை சர்க்கரை பயன்பாட்டை குறைத்துக் கொண்டு நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தவும். ஏனெனில் இதில் பல நன்மைகள் இருக்கிறது.

இது கலோரிகளின்றி உடலின் ஆற்றல் அதிகரிக்கும் சக்தி கொண்டது. ஆனால் தற்போது நாம் பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரையில் கலோரிகள் மிகவும் அதிகம் என்பதை மறக்க வேண்டாம்.

கருப்பட்டி உடலினுள் செல்லும் போது அசிட்டிக் அமிலமாக மாறி, வயிற்றில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரித்து, எளிதில் செரிமானமாகச் செய்யும். இதுவே மலச்சிக்கலை தடுக்க உதவும்.

இதய நோய்களில் இருந்து நாட்டுச் சர்க்கரை காக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும்.

புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்திருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவில் நாட்டுசர்க்கரையும் ஒன்று.

நாட்டுச் சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் கொழுப்பு சேர்மானத்தை தடுக்க முடியும்.

இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, நீரிழிவு நோயை ஏற்படுத்தக்கூடும். நாட்டுச் சர்க்கரை பயன்பாடு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT