முகப்பு
மகளிர்மணி

குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்!

சாப்பிடும் முறை, சுவாச, உடற்பயிற்சி, ஓய்வு, சுகாதாரம் குறித்து குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். இதன் மூலம் உற்சாகமும், நல்ல எண்ணங்களும் பிறக்கும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:


சாப்பிடும் முறை, சுவாச, உடற்பயிற்சி, ஓய்வு, சுகாதாரம் குறித்து குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். இதன் மூலம் உற்சாகமும், நல்ல எண்ணங்களும் பிறக்கும். கெட்ட அம்சங்களை குழந்தைகள் தாமாகவே புரிந்து கொண்டு தவிர்க்க முடியும்.

 குழந்தைகளின் சுய கௌரவமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்க உதவுங்கள். இதன்மூலம், ஆரோக்கியம் மேம்படும். எல்லா செயல்களிலும் உற்சாகம் பிறக்கும்.

குழந்தைகளுக்கு எந்த வகை பன்முக அறிவும், இயல்பும் வலிமையாக இருக்கிறது என்று கண்டு பிடித்து, ஊக்குவியுங்கள். பாடம் சாராத விஷயங்களில் எதில் குழந்தைகள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். என்பதை தீர்மானித்து அதற்கேற்ப வழி நடத்துங்கள். பிடிக்காத எதையும் திணிக்காதீர்கள்.

புரியாததைக் கண்டு பயப்படாமல் துணிந்து செயல்பட சொல்லுங்கள். கூடவே, நீங்களும் துணைக்குச் செல்லுங்கள். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும்போது நிச்சயமாக தவறுகள் செய்வார்கள். அதை கண்டிக்காமல் முன்கூட்டியே யோசித்து செயல்பட கற்றுத்
தாருங்கள்.

இலக்குகள், கனவுகளை நனவாக்க நடைமுறை சாத்தியமான திட்டங்களை உருவாக்கிக் கொள்ளப் பயிற்சி கொடுங்கள். முதலில் குழந்தைகளுடன் பேசி திட்டங்களை தீர்மானியுங்கள். ஏனெனில், உங்கள் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த ரோல்மாடல் நீங்கள் தான்.

குழந்தைகளுக்கான விதிகளை வகுப்பதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் முன்மாதிரியாக நடந்து காட்டுங்கள். விதிகளுக்குப் பின்னால் இருக்கும் காரணங்கள், மதிப்பீடுகளை புரிய வையுங்கள்.

படிப்பு திட்டம் ( அட்டவணை) ஒன்றை உருவாக்கிக் கொடுங்கள். படித்தவற்றை மனதில் நன்கு பதிய வைத்துக் கொள்ள, திரும்பிப் பார்க்கச் சொல்லுங்கள், எழுதி பார்க்கச் சொல்லுங்கள். பயிற்சியாளராகவும் செயல்படுங்கள்.

குழந்தைகளின் அன்றாட செயல்பாடுகளில் விளையாட்டு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். நேர்மையாக இருக்க வேண்டுமென்ற உணர்வும் உண்டாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →