முகப்பு
மகளிர்மணி

அசோகமரத்தின் மருத்துவ குணங்கள்!

அசோக மரத்தின் பூக்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:49 AM
பகிர்:

அசோக மரத்தின் பூக்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. 

அசோக மர பட்டைகளைக் கொண்டு டீ போட்டு குடிப்பது மூல நோயை குணப்படுத்தும்.

அசோக மரத்தின் பட்டை கால் கிலோ, கருப்பு எள் 50 கிராம் இரண்டையும் அரைத்து தூள் செய்து  இதில் ஒரு தேக்கரண்டி எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாக சுண்ட வைத்து காலை மாலை இருவேளை குடித்து வர.. பெண்களுக்கு உண்டாகும் கருப்பை சார்ந்த அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டது அசோக மரம். 

கருப்பை பலவீனம், கருப்பையில் கட்டி, கருப்பை வீக்கம், கருப்பையில் சதை வளர்ச்சி, கரு சரியான நேரத்தில் கருப்பைக்கு வராத நிலை, சினைப்பையில் உண்டாகும் நீர்க்கட்டி, சினைப்பையையும் கருப்பையையும் இணைக்கும் பாலோப்பியன் டியூப்களில் உண்டாகும் குறைபாடுகள் போன்ற அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும் சக்தி அசோக மரத்திற்கு உண்டு.

ஒரு சிலருக்கு பல்வேறு காரணங்களால் உடல் சார்ந்த குறைபாடுகளினால் மாதவிலக்கு முறையாக வராமல் இருக்கும். இவர்கள் கால் கிலோ அசோகப்பட்டை, மாவிலங்கப்பட்டை 100 கிராம், சுக்கு 25 கிராம், கருஞ்சீரகம் 25 கிராம் ஆகிய வற்றை அரைத்து தூள் செய்து பத்திரப்படுத்தவும். இதில் மூன்று கிராம் அளவு காலை மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மாதாந்திர சுழற்சி முறையாக ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.