முகப்பு
மகளிர்மணி

உலக மொழிகளில் பாடும் இசைகுயில்!

மும்பையைச் சேர்ந்த 19 வயது ஷியாமோலி சங்கியை இளம் இசைமேதை என்று சொல்வதில் தவறில்லை. இவர், ஜூலு, ஜோஸா, ஸ்பானிஷ், சீனம், ஷோனா போன்ற உலக மொழிகளில் எல்லாம் பாடுகிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

மும்பையைச் சேர்ந்த 19 வயது ஷியாமோலி சங்கியை இளம் இசைமேதை என்று சொல்வதில் தவறில்லை. இவர், ஜூலு, ஜோஸா, ஸ்பானிஷ், சீனம், ஷோனா போன்ற உலக மொழிகளில் எல்லாம் பாடுகிறார்.

தபேலா, ஹார்மோனியம், பியானோ போன்ற இசைக்கருவிகளை மிகச் சிறப்பாக இசைக்கிறார். இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றில் பாடியிருக்கிறார்.

ஷியாமோலி ஆறு வயது முதலே இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்றவர். அதேநேரம் படிப்புக்கும், முக்கியத்துவம் அளித்து வந்திருப்பதாகச் சொல்கிறார். இவர் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயில்வது கணிதமும், தத்துவமும். அவர் கூறுகையில், ""எங்கள் குடும்பத்தில் எல்லோரும் நன்கு படித்தவர்கள். எனது பெற்றோரும் இசையில் நாட்டம் உள்ளவர்கள். அதனால் தான் அவர்கள் எனது இசைப் பயணத்துக்கு அனுமதித்தார்கள். இசையமைப்பாளர் ரவி சிங்ஹாலை, ஷியாமோலி சந்திக்க இவர்களது கூட்டணியில் புதிய பாடல் பிறந்தது.

பிரபல ஜீ மியூசிக் நிறுவனம் வெளியிட்ட அப்பாடலை, சமூக வலைத்தளத்தில் முதல் மாதத்திலேயே ஒரு கோடிப் பேருக்கு மேல் பார்த்து, கேட்டு ரசித்துள்ளார்கள்.

இரண்டாவது பாடலையும் வெளியிட்ட ஒரு வாரத்துக்குள்ளாக 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →