மகளிர்மணி

முருங்கைக் கீரை  வடை 

கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, வடை மாவுப் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

ரமாமோகன்

தேவையானவை:

முருங்கைக் கீரை - 1 கைப்பிடி அளவு
கடலைப் பருப்பு - கால் கிலோ
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 சிறிய துண்டு
சோம்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, வடை மாவுப் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அத்துடன் காம்புகள் நீக்கி ஆய்ந்து சுத்தம் செய்த முருங்கைக் கீரை. வெங்காயம், மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்க்கவும். பின்னர், இஞ்சி , பூண்டு விழுது, சோம்பு, உப்பு, கறிவேப்பிலைச் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வடைகளாகத் தட்டி போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான முருங்கைக்கீரை வடை தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

பொறியாளர்கள் பணிக்கான தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

பழந்தமிழரின் காலநிலை அறிவு!

SCROLL FOR NEXT