மகளிர்மணி

லிச்சி பழத்தின் நன்மைகள்!

சீனாவைப் பூர்வீகமாக கொண்ட இந்த லிச்சி பழம்,  இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும்.  இப்பழம், பல்வேறு ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளது.

சந்துரு

சீனாவைப் பூர்வீகமாக கொண்ட இந்த லிச்சி பழம்,  இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும்.  இப்பழம், பல்வேறு ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளது.

லிச்சி பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே இதனை உட்கொண்டால் செரிமானம் சீராக நடைப்பெற்று, கோடையில் ஏற்படும் வயிறு கோளாறுகளில் இருந்து விடுபடலாம். கலோரிகள் குறைவாக உள்ளதால் இப்பழத்தைத் தொடர்ந்து உண்பதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். 

*லிச்சி பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளதால், இதனை உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

* லிச்சி பழத்தில் உள்ள பைட்டோ-கெமிக்கல்கள், செல்களின் அசாதாரண வளர்ச்சியைத் தடுப்பதோடு, கண் புரை ஏற்படுவதையும் தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

* லிச்சிப் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். 

* லிச்சிப் பழத்தை அடிக்கடி உண்டு வந்தால், ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, ரத்த சோகையைக்  குறைக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் விடியவிடிய லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.79,000 பறிமுதல்

திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT