முகப்பு
மகளிர்மணி

கோதுமை பாதுஷா

சர்க்கரையும், தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிட்டு பாகுப் பதம் வந்தவுடன் இறக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, சோள மாவு, நெய்யைச் சேர்த்து, விரல் நுனியால் உதிரியாக ஆகும் வரை கலக்கவும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:30 AM
பகிர்:

தேவையானவை: 

கோதுமை மாவு - ஒன்றரை கிண்ணம்
சோள மாவு - 2  தேக்கரண்டி
கெட்டியான நெய் - அரை கிண்ணம்
தயிர் - 2  தேக்கரண்டி
சமையல் சோடா - கால் தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு கிண்ணம்
தண்ணீர் - அரை டம்ளர்
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: 

சர்க்கரையும், தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிட்டு பாகுப் பதம் வந்தவுடன் இறக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, சோள மாவு, நெய்யைச் சேர்த்து, விரல் நுனியால் உதிரியாக ஆகும் வரை கலக்கவும். தயிர், சமையல் சோடா இரண்டையும் சேர்த்து நுரைக்க அடித்து, மாவுடன் கலந்து பிசையவும். கூடுமானவரை தண்ணீர் சேர்க்க வேண்டாம். மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி,  உள்ளங்கையில் வைத்து அழுத்தி, கட்டை விரலால் நடுவில் சிறிது அழுத்திய பின் எண்ணெய்யில் பொரித்து, சூடான சர்க்கரைப் பாகில் அமிழ்த்தி எடுக்கவும். செர்ரி அல்லது கலர் தேங்காய்த் துருவல் கொண்டு அலங்கரிக்கவும்.

முழு கட்டுரையைப் படிக்க →