முகப்பு
மகளிர்மணி

எமோஷன் பாதிக்கும்!

சன்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்  "மகராசி'  தொடரில்  ராகினி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வனிதா ஹரிஹரன்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
பகிர்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "மகராசி' தொடரில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வனிதா ஹரிஹரன். இவர், சொந்த காரணங்களுக்காக சமீபத்தில் தொடரில் இருந்து விலகியிருக்கிறார். விலகல் குறித்து அவர் கூறுகையில்,"" எனக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இப்போது கர்ப்பமாக இருப்பதால் தொடரில் இருந்து விலகியுள்ளேன். ஏனென்றால், நான் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு இருந்தேன். அது நடிப்புதான் என்றாலும், என்னுடைய எமோஷன் குழந்தையைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக தற்காலிகமாக விலகியுள்ளேன்.

கரோனா பயத்தினால் வீட்டை விட்டு எங்கேயும் வெளியில் போவதில்லை. என்னுடைய "மகராசி' டீமை ரொம்பவே மிஸ் பண்றேன். அவர்களை நேரில் போய் பார்க்க முடியவில்லை என்று வருத்தமாக இருக்கு. இருந்தாலும், அவங்க கூட அடிக்கடி போனில் பேசுவது ஆறுதலாக இருக்கிறது. நெகட்டிவ் ரோலில் நடிக்கும்போது நிறைய பேர் என்னை திட்டுவாங்க. மெசேஜை ஓப்பன் பண்ணி பார்க்கவே முடியாது. இப்போ அப்படியே மாறிடுச்சு. நிறைய அன்பு கொடுக்கிறாங்க ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது'" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.