முகப்பு
மகளிர்மணி

மகிழ்ச்சியில் ஷிவாங்கி!

விஜய்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சூப்பர் சிங்கர்  7' நிகழ்ச்சியில்  போட்டியாளராக  சின்னத்திரையில் அறிமுகமானவர் ஷிவாங்கி.  பின்னர், "குக் வித் கோமாளி' நிகழ்ச்சி  அவரைப் புகழ் பெற செய்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சூப்பர் சிங்கர் 7' நிகழ்ச்சியில் போட்டியாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர் ஷிவாங்கி. பின்னர், "குக் வித் கோமாளி' நிகழ்ச்சி அவரைப் புகழ் பெற செய்தது. குறும்புத்தனமான பேச்சுக்காக சிறுவர் முதல் பெரியவர் வரை இவருக்கு ரசிகர்களாக உள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போது சமூக வலைதளங்களில் அதிமாக டிரெண்டிங் ஆன சின்னத்திரை பிரபலங்களில் ஷிவாங்கியும் ஒருவர்.

இதற்காக, சிறந்த பெண் பொழுதுபோக்கு நட்சத்திரம் என்ற அடிப்படையில் 2021-ஆம் ஆண்டுக்கான பிளாக் ஷீப் டிஜிட்டல் விருது, பிகைன்ட் வுட்ஸ் கோல்டு ஐகான் விருது, விஜய் தொலைக்காட்சியின் பிரபல ஜோடிகள் விருது எனப் பல விருதுகளைப் பெற்றார்.

இந்நிலையில், "குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் போது இவரது இன்ஸ்டா பக்கத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றிருந்த இவர், தற்போது 4 மில்லியன் பலோயர்களை தொட்டுவிட்டாராம்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தை சமீபத்தில் கேக் வெட்டி கொண்டாடியதோடு தனது ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார் ஷிவாங்கி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.