தலைமை நிதி அதிகாரி!
முதலாம் உலகப் போரால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களை எதிர் கொள்ள 1935-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டது.
முதலாம் உலகப் போரால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களை எதிர் கொள்ள 1935-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் தனியார் வசம் இருந்த நிலையில் 1949-ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டு, கருவூலமாகவும் செயல்பட்டு வருகிறது.
இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரிசர்வ் வங்கி மூலம் நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவது உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ரிசர்வ் வங்கியின் நிர்வாக நடவடிக்கைகளில் ஆளுனருடன் இணைந்து செயல்பட கூடுதலாக தலைமை நிதி அதிகாரியாக மூன்றாண்டு கால பொறுப்பில் 2018-ஆம் ஆண்டில் தலைமை நிதி அதிகாரியாக சுதா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். ரிசர்வ் வங்கியின் 12 -ஆவது நிர்வாக இயக்குநர் என்ற கூடுதல் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலைப் பட்டமும், பட்டயக் கணக்காளர், தணிக்கை கணக்காளர் மற்றும் நிறுவனச் செயலாளர் ஆசிய படிப்புகளிலும் தேர்ச்சிப் பெற்றுள்ள சுதா பாலகிருஷ்ணன், பல்வேறு நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றில் நிதி மேலாண்மை, வரி விதிப்பு, நிதி தணிக்கை சம்பந்தப்பட்ட பதவிகளில் செயலாற்றிய அனுபவம் பெற்றவர்.
முதன்மை நிதி அலுவலராகவும் துணை தலைவராகவும் 2013- ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ரிசர்வ் வங்கியின் இருப்பு நிலை அறிக்கையில், அனைத்து திட்டங்களும் அவற்றிற்கான விதி முறைகளும் உட்பட்டு இருப்பதை கவனிக்கும் முக்கிய பணியை மேற்கொள்வதுடன், அரசு மற்றும் வங்கிக் கணக்குகள் பிரிவுக்கும் இவர் பொறுப்பேற்றிருக்கிறார்.
நாட்டின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் முக்கிய நடவடிக்கைகளை செயல்படுத்தும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரோடு இணைந்து செயலாற்றும் தலைமை நிதி அதிகாரி பதவிக்கு முதன்முதலில் ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெருமைதானே.