தர்பூசணியில் நீர் சத்துகள் அதிகம் இருப்பதால் கோடைக்காலத்தில் வெயிலினால் ஏற்படும்உடலில் உள்ள சூட்டை தணிக்க வல்லது.
அதிகமான உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள்தர்பூசணியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது மற்றும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது. மேலும், தர்பூசணியில் அதிக அளவு நீர்தான் இருக்கிறது. கலோரியானது குறைவாகவே, இருக்கிறது. எனவே இது எடையை குறைக்க உதவுகிறது.
தர்பூசணி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. பிபிஉள்ளவர்கள் தாராளமாக இந்த தர்பூசணியை சாப்பிட்டு வரலாம். பிபி படிப்படியாக குறையும்.
ரத்த நாளங்களில் உள்ள அழுக்குகளை நீக்கவும் இந்த தர்பூசணி உதவுகிறது. மற்ற பழங்களில்இல்லாத பைட்டோ நியூட்ரியன்சத்துகள் இந்த பழத்தில் இருப்பதினால் உடலின் ஆரோக்கியத்தை உயர்த்தி சுறுசுறுப்பாக உடலை வைக்கிறது.
தர்பூசணியில் சிட்ருலின் எனும் புரதச்சத்து இருப்பதால், இதுஉடலில் உள்ள ரத்த நாளங்களை விரிவடைய செய்கிறது. இது இருதயக் கோளாறுகளையும் சரிசெய்கிறது.
தர்பூசணியில் லைக்கோபீன் எனும் புரத சத்துகள் இருப்பதால் எலும்புகளை வலுவடைய செய்து எலும்பு சம்பந்தமான நோய்களில் இருந்து விடுபடவும் தர்பூசணி நமக்கு உதவுகிறது.
தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவில் இருப்பதால் இதனை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா நோய் குணமாகும்.
இந்தப் பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் மலச்சிக்கலைப் போக்க உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.