பட்டாணி லாடு
முந்திரியை பொடிப் பொடியாகக் கிள்ளி நெய்யில் வறுக்க வேண்டும். பட்டாணியையும் நிலக்கடலையையும் மிக்ஸியில் மாவாக்கி, ஓர் அகலமான தட்டில் தட்ட வேண்டும்.
தேவையானவை:
வறுத்த பட்டாணி- 200 கிராம்
சர்க்கரை- 100 கிராம்
வறுத்த நிலக்கடலை- 100 கிராம்
ஏலப்பொடி- 1 தேக்கரண்டி
நெய்- 100 கிராம்
முந்திரி பருப்பு- 10
செய்முறை:
Advertisement
முந்திரியை பொடிப் பொடியாகக் கிள்ளி நெய்யில் வறுக்க வேண்டும். பட்டாணியையும் நிலக்கடலையையும் மிக்ஸியில் மாவாக்கி, ஓர் அகலமான தட்டில் தட்ட வேண்டும். அவற்றோடு ஏலப்பொடி முந்திரியையும் போட்டு, ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு நெய்யை நன்றாகக் காய்ச்சி மாவின் மீது விட்டுப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். பட்டாணி லாடு சத்தானது.