வெள்ளை அப்பம்
கோதுமை மாவுடன் சர்க்கரையும் தயிரும் சேர்த்துக் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
தேவையானவை:
கோதுமை மாவு- 200 கிராம்
தயிர்- 100 கிராம்
சர்க்கரை- 1 மேஜை கரண்டி
தேங்காய்த் துருவல்- 1 மூடி
சீரகம்- 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய்- 6
உப்பு, எண்ணெய்- தேவையானது
செய்முறை:
Advertisement
கோதுமை மாவுடன் சர்க்கரையும் தயிரும் சேர்த்துக் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து வெண்ணெயாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதை கோதுமை மாவோடு சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் ஒரு கரண்டி மாவைவிட்டு அப்பமாக வெந்து எடுக்க வேண்டும்.