கட்லெட் ருசிக்க...
சான்ட்விச்சின் உள்ளே வைக்கும் பொருள்களையும் முதலிலே தயாரித்து வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது ரொட்டித் துண்டுகளை வைத்து உடனே சான்ட்விச் தயாரித்து விடலாம்.
சான்ட்விச்சின் உள்ளே வைக்கும் பொருள்களையும் முதலிலே தயாரித்து வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது ரொட்டித் துண்டுகளை வைத்து உடனே சான்ட்விச் தயாரித்து விடலாம்.
அரிசியை கழுவி சுத்தப்படுத்தி வேக வைக்க தேவையான அளவு தண்ணீரில் கொட்டி வைத்து விடுங்கள். மறுநாள் சீக்கிரம் அரிசி வெந்து விடும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து ஃபிரிட்ஜில் வைத்திருந்தால், தேவைக்கு எடுத்து உடனடியாக சமையலுக்கு பயன்படுத்தலாம்.
சமையலுக்கு தேவைப்படும் சமையல் பொடிகளை வீட்டில் தயாரிக்கலாம். ஆனால் ஆஸ்துமா போன்ற சுவாச தடை நோய் இருப்பவர்கள் வீடுகளில் சமையல் பொடிகளை தயாரிப்பதை தவிர்த்து விடுங்கள்.
முட்டைக்கோஸ் காரட் சீவியில் சீவினால் ஒரே சீராக அழகாக நறுக்கப்படும்.
பஜ்ஜிக்கு கடலை மாவு பிசையும் போது சிறிதளவு சமையல் சோடா சேருங்கள். பஜ்ஜி அதிகமான அளவு எண்ணெய்யை உறிஞ்சாது.
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சிறிதளவு ஏலக்காய்த் தூளும் சிறிதளவு சுக்குத்தூளும் கலந்திடுங்கள். சப்பாத்தி சுவை அதிகரிக்கும் கூடவே எளிதாக ஜீரணமாகும்.
வெஜிடபிள் கட்லெட் தயாரிக்கும்போது சிறிதளவு தேங்காய் சேருங்கள். கட்லெட் அதிக ருசி தரும்.
ஆப்பத்திற்கு மாவு கலக்கும்போது ஒரு தேக்கரண்டி கோதுமை மாவு சேருங்கள். ஆப்பம் சீக்கிரம் காய்ந்து போகாது.
ஜெல்லி சீக்கிரமாக பக்குவ நிலைக்கு வர வேண்டுமானால் அதனை 20 நிமிடம் ஃபிரீசரில் வைத்திடுங்கள். பின்பு ஃபிரிட்ஜின் தட்டில் வைத்திடுங்கள்.
ஜாம் தயாரிக்கும்போது அதில் அரை தேக்கரண்டி கிளிசரின் சேர்த்தால் அதிகமான அளவு சர்க்கரை (சீனி) சேர்க்க வேண்டிய நிலை ஏற்படாது.
ஜாம் கெட்டியாகிவிட்டால், அதனை பாத்திரத்தோடு சிறிது நேரம் சுடுநீரில் வைத்திடுங்கள் இளகி வந்து விடும்.
பால் சேர்த்து "புட்டிங்" தயாரிக்கும் போது "எவர்சில்வர்" பாத்திரம் பயன்படுத்துங்கள். அலுமினியப் பாத்திரம் பயன்படுத்தினால் நிற வித்தியாசமும் சுவை குறைவும் ஏற்படும்.
சர்க்கரை (சீனி) பாகு தயாரிக்கும் போது அதில் சிறிதளவு பால் சேருங்கள். பாகு கரிய நிறம் ஆகாது.
தோசை, இட்லிக்கு ஓய்வு நாளில் மாவு அரைத்து ஃபிரிட்ஜில் வைத்து விடுங்கள் ஒரு வாரம் வரை இந்த மாவை பயன்படுத்தலாம்.
கடலை, பயறு வகைகளையும் முதல் நாள் இரவிலேயே ஊறவைத்து விடுங்கள். நேரம் மிச்சமாகும்
சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிதளவு பால் பவுடரும் கலந்தால், சப்பாத்திக்கு நல்ல சுவை கிடைக்கும்.
சப்பாத்தி மாவில் சிறிதளவு மோர், சீரகத்தூள், மிளகுத்தூள் போன்றவை கலந்தால், சப்பாத்திக்கு வித்தியாசமான ருசி கிடைக்கும்.