மகளிர்மணி

முடக்கத்தான் கீரை தட்டை

DIN

தேவையானவை:

முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடி 
இட்லி அரிசி - ஒரு கிண்ணம்
காய்ந்த மிளகாய்- 10
சீரகம்- ஒரு தேக்கரண்டி
ஓமம்- 2 தேக்கரண்டி
வறுத்த வேர்க்கடலை- ஒரு தேக்கரண்டி
கடலைப் பருப்பு- 2 தேக்கரண்டி
பொட்டுக் கடலை- அரை கிண்ணம்
வெண்ணெய்- ஒரு மேஜை கரண்டி
கறிவேப்பிலை- ஒரு கொத்து
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

அரிசியையும் காய்ந்த மிளகாயையும் தண்ணீர் விட்டு இரு மணி நேரம் ஊற வைக்கவும். பொட்டுக் கடலையை பவுடர் செய்யவும். முடக்கத்தான் கீரையை ஒரு துளி எண்ணெய் விட்டு, வதக்கி  அரைத்துகொள்ளவும். ஊற வைத்த அரிசியை மிளகாய் சேர்த்து அரைக்கவும். மீதமுள்ள அரிசியுடன் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைத்து ஒன்றாகக் கலக்கவும். இதனுடன் ஊறவைத்த கடலைப் பருப்பு, வறுத்த பொடித்த வேர்க்கடலை, பொட்டுக் கடலைப் பொடி, உப்பு, ஓமம் சேர்த்து கலக்கவும். பிறகு அரைத்த கீரையை சேர்த்து நன்றாகக் கலக்கவும். சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து ஒரு துணியில் சிறு பூரிகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை அணியின் ஒற்றுமையை உறுதி செய்திருக்க வேண்டும்: ஹர்பஜன்

உடனடியாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்: இபிஎஸ்

கேரளத்துக்கு அதி கனமழைக்கான ’சிவப்பு’ எச்சரிக்கை!

சென்னை, 7 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT