தினை வெஜிடபிள் குழிப்பணியாரம்
தினை அரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பு மூன்றையும் இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, நீரை வடித்து நைஸாக அரைத்து, உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
தேவையானவை:
வெந்தயம்- 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு- 4 தேக்கரண்டி
திணை அரிசி- 100 கிராம்
காரட்-10
வெங்காயம்- 5
பச்சை மிளகாய்-2
கடுகு- 1 தேக்கரண்டி
நெய்- 50 கிராம்
இஞ்சி பேஸ்ட்- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையானது
செய்முறை:
Advertisement
தினை அரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பு மூன்றையும் இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, நீரை வடித்து நைஸாக அரைத்து, உப்பு சேர்த்து கலக்க வேண்டும். காரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பேஸ்ட் சேர்த்து கடுகு தாளித்து வதக்கி மாவில் கலக்க வேண்டும். குழிப் பணியாரச் சட்டியில் எல்லா குழியிலும் நெய் தடவி மாவை ஊற்றி திருப்பிப் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.