பாதாம் சர்பத்
பால்- அரை லிட்டர், பாதாம் பருப்பு- 50 கிராம், ஏலக்காய்-5, சர்க்கரை- 1 மேஜை கரண்டி, ஏதாவது ஒரு கலர் எசன்ஸ் - சிறிதளவு
தேவையானவை:
பால்- அரை லிட்டர், பாதாம் பருப்பு- 50 கிராம், ஏலக்காய்-5, சர்க்கரை- 1 மேஜை கரண்டி, ஏதாவது ஒரு கலர் எசன்ஸ் - சிறிதளவு
செய்முறை:
பாலை நன்றாகக் காய்ச்சி, அதை குளிர வைக்க வேண்டும். பாதாம் பருப்பை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, தோலை நீக்கி விழுதாக அரைக்க வேண்டும். ஏலக்காயை பொடி செய்ய வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பாலுடன் அரை லிட்டர் பாதாம் விழுது போட்டு, கலக்கி ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் குறைந்த தீயில் கொதிக்க வைத்து கீழே இறக்க வேண்டும். சர்க்கரை, கலர் எசன்ஸ் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி ஆறியவுடன் குளிர வைத்து குடிக்கலாம்.