மகளிர்மணி

கைப்பேசி: தேவை எச்சரிக்கை!

கைப்பேசி பயன்படுத்தாவிட்டாலும்,  அதன் கோபுரங்களின் கதிர்வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர்வீச்சும் பாதிக்கவே செய்யும்.

அமுதா அசோக் ராஜா

கைப்பேசி பயன்படுத்தாவிட்டாலும்,  அதன் கோபுரங்களின் கதிர்வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர்வீச்சும் பாதிக்கவே செய்யும். இதனால்தான் குருவிகள்  நகர்ப்புறங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.

எப்போதும் கைப்பேசியை பயன்படுத்தாமல், அவசியத்துக்குப் பயன்படுத்துவது நல்லது.

முடிந்த அளவு கைப்பேசிகளை உபயோகிப்பதைத் தவிருங்கள். தரைவழி தொலைபேசியை உபயோகிக்கும் வசதி இருந்தால்,  அதை பயன்படுத்தவும்.

சுருக்கமான செய்தியைத் தெரிவிக்க வேண்டும் என்றால்,  கைப்பேசியில் பேசுவதைத் தவிர்த்து எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால்,  சுலபமாக கதிர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது. 

கைப்பேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில் பேச வேண்டாம்.  கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.

காதில் வைத்து பேசுதல்,  ஹெட் போனில் பேசுதல் போன்றவைகளைவிட  கைப்பேசியில் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது.  பொது
இடங்களில் இவ்வாறு பேச வேண்டாம்.

தூங்கும்பொழுது அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால், அதை  உடனே கைவிடவும்.

நீங்கள் மற்றவர்களைத் தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஏற்றவுடன் கைப்பேசியைக் காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம்.  ஏனென்றால், பேசும்பொழுது ஏற்படும் கதீர்வீச்சின் அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.

கைப்பேசியை வலது பக்கக் காதில் வைத்து பேசாமல்,  இடது பக்கக் காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

முக்கியமாக,  பயணம் செய்யும்பொழுது கைப்பேசியில் விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள்.  ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

கைப்பேசிகளை சட்டையின் இடது பக்கப் பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.

கைப்பேசியில் பேசும்பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாற்று கல்வி, உற்பத்தி முறை நாட்டிற்குத் தேவை: ராகுல் காந்தி

கலை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்: துணை முதல்வர்

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

SCROLL FOR NEXT